Posts

Showing posts from August, 2011

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 52. களவு கற்பின்றி அமையாது

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 52. களவு கற்பின்றி அமையாது இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 25, 2011  களவு வெளிப்பட்டுவிடின் கற்பு நிலையை எய்துதல் வேண்டும்.  அஃதாவது இருவர்க்கும் திருமணம் நிகழ்தல் வேண்டும்.  திருமணம் நிகழவில்லையேல் இருவரும் உயிர் வாழார். “கரணம் தப்பின் மரணம்” என்றால் மணச்சடங்கு; மணச்சடங்கு நிகழும் நிலை இல்லையேல் காதலர் இருவரும் உயிர் வாழார் என்பதாம்.  அதனாலேயே “கந்தருவம் கற்பின்றி அமையும்; களவு கற்பின்றி அமையாது” என நச்சினார்க்கினியர் கூறியதும் ஆகும். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்:172) http://www.natpu.in/?p=14423

thamizh katamaikal 80: தமிழ்க்கடமைகள் 80. மொழிக்கெலாம் தலைமை தமிழே

தமிழ்க்கடமைகள் 80. தமிழனுக்கு யாவனுளன் ஈடு இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 26, 2011  தமிழன் உடற்குருதி சூடு!- தமிழன் தனை எதிர்ப்போன் பாடுபெரும் பாடு! இமயம் கடாரமெனும் இடம் பலவென்றவனலவோ தமிழனுக்கு யாவனுளன் ஈடு? – தமிழன் தாங்கு புகழைத் தமிழா! பாடு! - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்     http://www.natpu.in/?p=14505

thamizh katamaikal 79: தமிழ்க்கடமைகள் 79. மொழிக்கெலாம் தலைமை தமிழே

தமிழ்க்கடமைகள் 79. மொழிக்கெலாம் தலைமை தமிழே இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 25, 2011  முதன்மையும் தலைமையும் மிக்கது தமிழ் உலகம் ஊமையா உள்ள அக் காலையே பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே இலகி என்றுநான் என்னும் மொழிக்கெலாம் தலைமையாம் தமிழ் -          புலவர் குழந்தை http://www.natpu.in/?p=14427

thamizh katamaikal 78: தமிழ்க்கடமைகள் 78. தமிழ் நீடு வாழ்க

தமிழ்க்கடமைகள் 78. தமிழ் நீடு வாழ்க இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 24, 2011  காதொளிரும் குண்டலமும் கைக்குவளை யாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப் போதொளிரும் திருவடியும் பொன்முடிசூ ளாமணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடு வாழ்க -          கவியோகி சுத்தானந்த பாரதியார் http://www.natpu.in/?p=14324

thamizh katamaikal 77: தமிழ்க்கடமைகள் 77. தமிழணங்கை வணங்குவோம்

தமிழ்க்கடமைகள் 77. தமிழணங்கை வணங்குவோம் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 23, 2011  காதிலங்கு குண்டமாகக் குண்டலகே சியுமிடையே கலையாச் சாத்தன் ஓதுமணி மேகலையும் ஒளிர்கைவளை யாவளையா பதியும் மார்பின் மீதணிசிந் தாமணியாச் சிந்தாம ணியுங்காலில் வியன்சி லம்பாத் திதில்சிலப் பதிகார மும்புனைந்த தமிழணங்கைச் சிந்தை செய்வோம் -          சங்குப் புலவர் http://www.natpu.in/?p=14198

thamizh katamaikal 76: தமிழ்க்கடமைகள் 76. தமிழ்மொழிக்கு உயர் மொழி இல்லை

தமிழ்க்கடமைகள் 76. தமிழ்மொழிக்கு உயர் மொழி இல்லை இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 22, 2011  தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதெனில் வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்: அறுவகை இலக்கணம்: 705 http://www.natpu.in/?p=14104

ilakkuvanarin padaippumanikal 51 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 51. அன்று சாதி கிடையாது

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 51. அன்று சாதி கிடையாது இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 24, 2011  ” பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு உருவு, நிறுத்த காம வாயில் நிறையே, அருளே, உணர்வொடு திரு என முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.” பிறப்பு, ஓழுக்கம், ஆண்மை, வயது, வடிவம், காதல் உணர்ச்சி, நிறை, அருள், அறிவுடைமை, திரு எனும் பத்திலும்  இருவரும் ஒத்திருக்க வேண்டும்.  பிறப்பு என்பது நல்ல குடியில் பிறத்தலாகும்.  குடி வேறு சாதிவேறு.  அன்று சாதி கிடையாது.  ஒவ்வொரு குடிக்கு ஒவ்வொரு பண்பு இருக்கலாம்.  அக்குடிப் பிறப்பால் ஒழுக்கம் உருவாகும்.  ஆதலின் அதனை அடுத்துக் குடிமையையும் வைத்தார்.”ஒழுக்கமுடைமை குடிமை” என்பது வள்ளுவர் வாய்மொழி.  வள்ளுவர் காலத்திலும் ஓழுக்கம் உடைமையே நல்ல குடிப்பிறப்பின் அடையாளமாகக் கருதப்பட்டு வத்துள்ளது.  ’ ஆண்மை ஆணுக்கு உரியதன்றோ? பெண்ணுக்கு எவ்வாறு பொருந்தும் எனக் கருதலாம்.  வலிமை இரு சாரார்க்கும் வேண்டியதொன்று.  உள்ள வலிமை, உடல் வலிமை...

ilakkuvanarin padaippumanikal 50 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 50. தமிழகம் நாகரிகத்தால் சிறந்திருந்தது

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 50. தமிழகம் நாகரிகத்தால் சிறந்திருந்தது இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 23, 2011  காதல் திருமணமே நாகரிகத்தின் உச்சநிலையாகும்.  ஆதலின் தொல்காப்பியர் காலத் தமிழகம் நாகரிகத்தால் சிறந்திருந்தது என்று தெளியலாம்.  காதல் திருமணமே பெண் உரிமையை – ஏன் ஆண் உரிமையையும்-நிலைநாட்டக் கூடியது. ஆடை அணிகலன் முதலியவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கு உரிமையளிக்கும் மன்பதை தம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு உரிமையளிக்க ஒருப்படாதது கொடுமையினும் கொடுமையன்றோ? (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்:159) http://www.natpu.in/?p=14196

ilakkuvanarin padaippumanikal 49 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 49. தமிழர் திருமணநெறி இன்ப நெறி

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  49. தமிழர் திருமணநெறி இன்ப நெறி இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 22, 2011  வடவர்க்குத் திருமணம் என்பது புதல்வரைப் பெறுவதற்காகவே.  ஆண் பெண் சேர்க்கையால் புதல்வன் பிறத்தல் வேண்டும்.  ஆதலின் காதலை அடிப்படையாகக் கொள்ளவில்லை.  தமிழர்க்கு மணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பாக நிகழவேண்டிய வாழ்வின் இன்பக்கூறுகளுள் ஒன்று. வாழ்வின் தலையாய இன்பம் அதுவே என்று கருதினர்.  ஆதலின் அதனை இன்பம் என்றே அழைத்தனர்.  தொல்காப்பியரும் இவ் வின்பத்துக்கு முதன்மை கொடுத்து, “இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு” என்று கூறினார்.  திருமண இன்பம் தலையாய இன்பம்;  அது காதல் நெறியில்தான் அடையப் பெறல் வேண்டும் என்பதே தொல்காப்பியர்  துணிபு.  காதல் எவ்வாறு உண்டாகும்.  என்பதைப் பின்வரும் நூற்பாவால் கூறுகின்றார். “ஒன்றே வேறே என்று இருபால் வயின் ஓன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோள் ஆயினும் கடிவரை இன்றே.”" (தொல்காப்பிய...

ilakkuvanarin padaippumanikal 48: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 48. அரிட்டாடில் காலத்திற்கு முன்பே தமிழ் இலக்கியக் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 48. அரிட்டாடில் காலத்திற்கு முன்பே தமிழ் இலக்கியக் கொள்கைகள் வகுக்கப்பட்டன. இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 20, 2011  இலக்கியம் உலகியலைத் தழுவியும் உலகியலொடு ஒத்த கற்பனை முறையிலும் இயற்றப்படல் வேண்டும் எனவும் சுட்டுகின்றார். மேனாட்டார் இயற்கையைத் தழுவி இயற்றலே இலக்கியம் என்பர்.  தொல்காப்பியரும் இயற்கையையும் உலகியலையும் தழுவியே இலக்கியம் இயற்றப்படல் வேண்டுமென்று பன்முறையாலும் விளக்குகின்றார்.  இவ்வாறு இயற்றப்படுதலை ’ புலன் நெறி வழக்கம் என அழைத்துள்ளார். புலமை நிரம்பிய புலவரால் பாடப்பட்டு வழங்கி வருவது ஆதலின் அப்பெயர் பெற்றது போலும். ” நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலன்நெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும் உரிய தாகும் என்மனார் புலவர்” “என்மனார் புலவர்” என்பதனால் இப் புலன் நெறி வழக்கமாம் இலக்கியப் படைப்பு நெறி இவர்க்கு முன்புள்ள புலவர்களால் கொள்ளப்பட்ட ஒன்றாகும் எனத் தெரியலாம்.  ஆதலின், கிரேக்க நாட்டு அரித்தாட்டில் காலத்திற்குப் ப...

ilakkuvanarin padaippumanikal 47: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 47. நங்கையர் நல்லற நெறியினர்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 47. நங்கையர் நல்லற நெறியினர் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 19, 2011  இலக்கியத்திலும் நங்கையர் நாணிகவா நல்லற நெறியினராகவே கூறப்பட வேண்டியவர் என்பதே ஆசிரியர் தொல்காப்பியர் கொள்கையாம். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 149) http://www.natpu.in/?p=13892

ilakkuvanarin padaippumanikal 46: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 46. தொழில் முறையில் கட்டுப்பாடு கிடையாது

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 46. தொழில் முறையில் கட்டுப்பாடு கிடையாது இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 18, 2011  பொருளீட்டும் பொருட்டும் யாவரும் எங்கும் செல்லலாம்.  இன்ன இடத்திற்கு இன்னார் தாம் செல்ல வேண்டும் என்ற வரையறையோ கட்டுப்பாடோ கிடையாது. தொழில் முறையில் இன்ன சாதிக்கு இன்ன தொழில் தான் என்ற கட்டுப்பாடு கிடையாது.  இக் கருத்துக்களை வற்புறுத்துவதே ” மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையால் பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும் இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே” ” மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே” எனும் நூற்பாக்கள்.  இவைகட்குப் பொருள் கூறிய இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தமிழ் நூல் நெறி முறைக்கு மாறாக ஆரியர் நெறியினைத் தழுவிக் கொண்டுள்ளனர். ‘நால்வர்’ என்பதற்கு நான்குநில மக்களும் என்று பொருள் கொள்ளாது, நான்கு வருணத்தார் என்றும், மேலோர் என்பதற்கு ” மேன்மை யுற்றோர்” என்றும் பொருள் கொள்ளாது, இரு பிறப்பினராய மேல் வகுப்பு மூவர் என்றும், அவருள் சிறந்த பிராமணர்...

thamizh katamaikal 75: தமிழ்க்கடமைகள் 75.செந்தமிழே உலக மொழி

தமிழ்க்கடமைகள் 75. செந்தமிழே உலக மொழி இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 20, 2011  சதுமறைஆ ரியம்வருமுன் சகமுழுதும் நினதாயின் முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமோ? வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள் கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே! வீறுடை கலைமகட்கு விழியிரண்டு மொழியானால் கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார் கலைமகள்தன் பூர்வதிசை காணுங்கால் அவள்விழியுள் வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்? பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே? வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி? மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தின் மாண்டோர்கள் கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ? - பேராசிரியர் சுந்தரம் பிள்ளை: மனோன்மணியம் http://www.natpu.in/?p=13987

thamizh katamaikal 74: தமிழ்க்கடமைகள் 74: தமிழின் பெருமை யாவரே கணித்தறிவார்

தமிழ்க்கடமைகள்  74. தமிழின் பெருமை யாவரே கணித்தறிவார் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 19, 2011  வடமொழியைப் பாணினிக்கு வகுத் தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனில் கடல்வரைப்பில் இதன்பெருமை யாவரே கணித்தறிவார் -          சிவஞான முனிவர் http://www.natpu.in/?p=13894

thamizh katamaikal 73: தமிழ்க்கடமைகள் 73. எங்கள் குலத் தெய்வம் தமிழ்

தமிழ்க்கடமைகள்  73. எங்கள் குலத் தெய்வம் தமிழ் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 18, 2011  பங்கயத்துக் குமரிமுனைப் பாதம் சேர்த்தாள் பசும்பொன்முடி வேங்கடத்தைப் புனைந்தாங்கார்த்தாள் பொங்கிவரும் காவிரியை இடையில் கோத்தாள் புரமூன்றும் கடற்கன்னி பணியப் பார்த்தாள் மங்கலம் சேர் மேலைமலைச் செங்கோ லுற்றாள் எங்கள் குலத் தெய்வம் தாய் - கவியோகி ச.து.சுத்தானந்த யோகியார்: தமிழ்க்குமரி http://www.natpu.in/?p=13777

Ilakkuvanarin padaippu manikal 45: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 45: உரையாசிரியர்கள் நால்வருண விளக்கங்கள் தொல்காப்பியர் கொள்கைக்கு முரண்பட்டன

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 45. உரையாசிரியர்கள் நால்வருண விளக்கங்கள் தொல்காப்பியர் கொள்கைக்கு முரண்பட்டன இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 17, 2011  “ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” என்றார்.  ஆனால் உரையாசிரியர்களில் சிலர் உயர்ந்தோர் என்பதற்கு முதல் இரு வருணத்தார் (அந்தணர், அரசர்) என்றும், மூன்று வருணத்தார் ( அந்தணர், அரசர், வணிகர்) என்றும் பொருள் கூறியுள்ளனர். “உயர்ந்தோ ரெனக் கூறலின் வேளாளரை ஒழிந்தோர் என்றுணர்க” என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.  முற்றிலும் பொருந்தா உரை கூறித் தொல்காப்பியத்தை இழி நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர் உரையாசிரியர்கள்.  உரையாசிரியர் காலத்தில் ஆரிய முறையாம் நால்வகை வருண நெறி நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம்.  தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் இடம் பெற்றிலது.  அன்றியும் தொல்காப்பியர் தமிழக மக்கள் வாழ்வினைக் கூற வந்தனரேயன்றி தமிழர்க்குத் தொடர்பிலாப் பிற நாட்டினர் வாழ்க்கை கூற நூல் செய்திலர்.  தொல்காப்பியர்க்குப் பிற்பட்டுத் தோன்...

Ilakkuvanarin padaippu manikal 44: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 44: பாடலியற்றுவோர் பலநூல்புலமை பெற்றிருக்க வேண்டும்.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 44. பாடலியற்றுவோர் பலநூல்புலமை பெற்றிருக்க வேண்டும். இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 16, 2011  பாடல்கள் இயற்றுவோர் யாப்பிலக்கணம் மட்டும் அறிந்தால் போதாது.  நிலநூல், வான்நூல், உயிர்நூல், அற நூல், மெய்யறிவு நூல், உழவு நூல், கடவுள் நூல், மக்களின் நூல் முதலியன யாவும் கற்றறிந்து இருத்தல் வேண்டும்.  அவர்களே வழுவின்றி யாவரும் விரும்ப எக்காலத்தும் நிலைத்து நிற்குமாறு இலக்கியம் இயற்றுதல் இயலும்.  கற்பித்துக் கூறும் நாடக வழக்காயினும், கண்ணாற் காணும் உலகியல் வழக்காயினும் முற்றும் கற்றுத் துறை போய புலவர்க ளே செம்மையுற இயற்றுதல் இயலும்.  தொல்காப்பியர்க்கு முன்னும் பின்னும் வாழ்ந்த புலவர்களில் பலர் அன்ன மாட்சியினை உடையராய் ஆய்தொறும் ஆய்தொறும் அளப்பில் இன்பம் அளிக்கும் செந்தமிழ் இலக்கியங்களை இயற்றினர். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 142-143) http://www.natpu.in/?p=13578

Ilakkuvanarin padaippu manikal: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 43. இன்னிசையில் தமிழர்கள் சிறந்திருந்தனர்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 43. இன்னிசையில் தமிழர்கள் சிறந்திருந்தனர் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 15, 2011  கருப்பொருளில் யாழும் சேர்க்கப்பட்டுள்ளது. ‘யாழ்’ இன்னிசைக் கருவி ; இன்னிசையில் தமிழர்கள் நன்கு சிறந்திருந்தனர் என்பதற்கும் வாழ்வில் இன்னிசையும் தக்க இடம் பெறுதல் வேண்டும் என்று கொண்டிருந்தனர் என்பதற்கும் இது சான்றாகும். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 138-139)

thamizh kadamaikal 72 : தமிழ்க்கடமைகள் 72: தமிழ் எங்கள் உயிர்

தமிழ்க்கடமைகள்  72. தமிழ் எங்கள் உயிர் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 17, 2011  தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். -          பாரதிதாசன் : பாரதிதாசன் கவிதைகள்: தொகுதி 1 http://www.natpu.in/?p=13676

thamizh kadamaikal 71 : தமிழ்க்கடமைகள் 71:சீரிளமைத் தமிழை வாழ்த்துவோம்

தமிழ்க்கடமைகள் 71.சீரிளமைத் தமிழை வாழ்த்துவோம் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 16, 2011 ..  நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத்திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணம் அதில்சிறந்த திராவிடநல் திருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினிமோர் எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதிரத் தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம் போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே - பேராசிரியர் சுந்தரம் பிள்ளை: மனோன்மணியம்

thamizh kadamaikal 70 : தமிழ்க்கடமைகள் 70. அனைத்து மொழிகளையும் வென்ற அன்னைத் தமிழை ஏத்துவோம்

தமிழ்க்கடமைகள் 70. அனைத்து மொழிகளையும் வென்ற அன்னைத் தமிழை ஏத்துவோம் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : August 15, 2011 ...  மறைமுதல் கிளந்த வாயன்மதி மகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி இலக்கணம் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பில் பாடை அனைத்தும் வென்று ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்த் தெய்வத்தை உள்நினைந்து ஏத்தல் செய்வாம் - கருணைப் பிரகாசர்: திருக்காளத்தி புராணம்: கடவுள் வாழ்த்து

கணிதத்தின் கண்கள்! தமிழ் எண்கள்! -2

Image
கணிதத்தின் கண்கள்! தமிழ் எண்கள்! -2 http://www.natpu.in/?p=13531 பதிவு செய்த நாள் : August 13, 2011

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 42. தெய்வம் தமிழ்ச்சொல்லே

Image
இலக்குவனாரின் படைப்பு மணிகள் 42. தெய்வம் தமிழ்ச்சொல்லே இலக்குவனார் திருவள்ளுவன் http://www.natpu.in/?p=13492   பதிவு செய்த நாள் : August 13, 2011  Loading ...  சிலர் தெய்வம் வேறு ; கடவுள் வேறு என்பர்.  சிலர் தெய்வம் வட சொல், கடவுள் தென் சொல் என்பர்.  தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல்லே.  தெய்வமும், கடவுளும் ஒன்றே. ‘தெய்வம்’ என்ற சொல் ‘தேய்’ என்பதினின்றும் தோன்றியிருக்கக் கூடும்.  உயிர்களின் துன்பத்தைத் தேய்ப்பது தெய்வம்.  மக்கள் கடவுளை நினைக்கத் தொடங்கியது தம் துன்ப நீக்கத்திற்காகவே.  இன்றும் பலர் கடவுளை நினைப்பது தமக்குத் துன்பம் வரும் காலத்தினால் தான்.  ஆதலின் ‘தெய்வம்’ எனும் தமிழ்ச் சொல்  ‘தேய்’ என்ற அடியினின்று தோன்றியதாகக் கொள்ளலாம். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 138)

thamizh katamaikal 69: தமிழ்க்கடமைகள் 69. தெள்ளமுதின் மேலான முத்தமிழ்

தமிழ்க்கடமைகள் 69. தெள்ளமுதின் மேலான முத்தமிழ் இலக்குவனார் திருவள்ளுவன் http://www.natpu.in/?p=13495  பதிவு செய்த நாள் : August 13, 2011  தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான முத்திக் கனியென முத்தமிழே- புத்திக்குள் உண்ணப் படுந்தேனே - தமிழ்விடு தூது : 69-70

Ilakkuvanarin padaippu manikal - clock pot: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 31. நாழிகை வட்டில்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 31. நாழிகை வட்டில் இலக்குவனார் திருவள்ளுவன் http://www.natpu.in/?p=13439   பதிவு செய்த நாள் : August 12, 2011  நாழிகை வட்டிலால் நாழிகை யறிந்து நாட்கடனாற்றினர் என்பது பண்டைய இலக்கியங்களால் நன்கு அறியலாகும். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 137)

தமிழ்க்கடமைகள் 68. தமிழுக்கு இணையில்லை - தமிழ்விடுதூது

தமிழ்க்கடமைகள்  68. தமிழுக்கு இணையில்லை இலக்குவனார் திருவள்ளுவன் http://www.natpu.in/?p=13441    பதிவு செய்த நாள் : August 12, 2011  அரியா சனமுனக்கே யானா லுனக்குச் சரியாரு முண்டோ தமிழே - தமிழ்விடுதூது : 62

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 30. பன்னிரு மாதங்களும் தமிழ்ப்பெயர்களே

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  30. பன்னிரு மாதங்களும்        தமிழ்ப்பெயர்களே   இலக்குவனார் திருவள்ளுவன் http://www.natpu.in/?p=13339     பதிவு செய்த நாள் : August 11, 2011 ..  கார் காலம் என்பது ஆவணியும் புரட்டாசியுமாம்.,  ஒரு காலத்தில் ஆண்டுத் தொடக்கம் ஆவணி முதலாகக் கொள்ளப்பட்டது என்பர்.  இன்றும் மலையாள நாட்டில் ஆண்டுத் தொடக்கம் ஆவணியிருந்தே கொள்ளப்படுகின்றது.  இப்பொழுது சித்திரை முதலாக ஆண்டுத் தொடக்கம் கொள்கின்றோம்.  இம்மாற்றம் என்று உண்டாயிற்று என்பது ஆராய்ந்து காண்டற்குரியது.  ஆவணியும் புரட்டாசியும் கார்காலம்; ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் காலம்; மார்கழியும் தையும் முன் பனிக்காலம்; மாசியும் பங்குனியும் பின் பனிக் காலம்; சித்திரையும் வைகாசியும் இளவேனிற்காலம்; ஆனியும் ஆடியும் முதுவேனிற்காலம்.  இவ்வாறு காலங்கள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டு வந்தன.  பன்னிரண்டு மாதங்களும் தமிழ்ப் பெயர்களே.  இவை தொல்காப்பியர் காலத்திலேயே ...

thamizh kadamiakal 67: தமிழ்க்கடமைகள் 67. மூவுலகும் போய் வரும் முத்தமிழ்

தமிழ்க்கடமைகள் 67. மூவுலகும் போய் வரும் முத்தமிழ் இலக்குவனார் திருவள்ளுவன் http://www.natpu.in/?p=13341    பதிவு செய்த நாள் : August 11, 2011  தேசம்ஐம்பத் தாறில் திசைச்சொற் பதினேழும் மாசறநீ வைத்தகுறு மன்னியரோ- வீசு குடகடலும் கீழ்கடலும் கோக்குமரி யாறும் வடவரையு மெல்லை வகுத்தாய்- இடையிருந்த முன்னுறுந்தென் பாண்டி முதற்புனனாடீறான பன்னிரண்டு நாடுமப் பானாடோ- அந்நாட்டுள் வையை கருவைமரு தாறுமரு வூர்நடுவே ஐயநீ வாழு மரண்மனையோ – செய்யபுகழ் மூவேந்தர் வாகனமா மூவுலகும் போய்வளைந்த பாவேந்தே நீபெரிய பார்வேந்தோ - தமிழ்விடு தூது : 37-41

Ilakkuvanar padaippu manikal 29: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 29. காலப்பகுப்பைத் தொன்றுதொட்டே தமிழர்கள் அறிந்திருந்தனர்.

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  29.காலப்பகுப்பைத் தொன்றுதொட்டே தமிழர்கள் அறிந்திருந்தனர். இலக்குவனார் திருவள்ளுவன் http://www.natpu.in/?p=13234 பதிவு செய்த நாள் : August 10, 2011  நாழிகை, நாள், வாரம், திங்கள், பருவம், ஆண்டு முதலிய பிரிவுகளைத் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழர்கள் அறிந்திருந்தனர். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 136)

Thamizh kadamaigal 66: தமிழ்க்கடமைகள் 66. உயிர்க்கு உயிராய் நிற்கும் தமிழ்

தமிழ்க்கடமைகள்  66. உயிர்க்கு உயிராய் நிற்கும் தமிழ் இலக்குவனார் திருவள்ளுவன் http://www.natpu.in/?p=13233   பதிவு செய்த நாள் : August 10, 2011  பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண் டெஞ்சியழுக் கேறா வியற்கலையே- விஞ்சுநிறம் தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகம் தீயாது சொல்விளையுஞ் செய்யுளே- வீயா தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய் வருகுலமோ ரைந்தாயும் வந்தாய் - தமிழ்விடு தூது : 17-19

கோவை ஞானி பேட்டி

கோவை ஞானி பேட்டி கோவை ஞானியின் [image: கோவை ஞானி - மார்ச்சியமும் தமிழ்த் தேசியமும்]இயற்பெயர்  கி. பழனிச்சாமி. 1935ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பல்லடம் வட்டம் சோமனூரில்  பிறந்தவர். கோவையிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் தமிழ் இலக்கியம் கற்றவர்.  பின்பு, கோவையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். இடையில் ஏற்பட்ட பார்வை  இழப்பின் காரணமாக ஆசிரியப்பணியை விட்டவர். பார்வை இழப்புக்குப் பிறகு இன்றுவரை  புதிய புதிய நூல்களைக் கற்று, அவை பற்றிய திறனாய்வுகளையும், விவாதங்களையும்  எழுதி வருகிறார் ஞானி. இதழியலில் தீராத ஆர்வம் கொண்டு, எப்போதும் ஏதாவது ஒரு  இதழை நடத்தி வருகிறார். இப்போது `தமிழ் நேயம்’ இதழை நடத்தி வருகிறார்.  மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம், தமிழ் தேசியம் என ஞானியின் ஈடுபாடும்  தனித்துவமானது. 1965 முதல் ஞானிக்கு மார்க்சிய ஈடுபாடு. எஸ்.என். நாகராஜனைத்  தனது மார்க்சிய ஆசானாகக் கூறுகிறார் ஞானி. பத்துக்கும் மேற்பட்ட நூல்களை  எழுதியுள்ள இவர், `நிகழ்’ இதழின் மூலமும் தமிழ் அறிவுச் சூழலில் பாதிப்பை  உருவாக்கியவர். வறட்டுத்தனமான கட்சி மார...