Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 62 : பொன்னியின் செயலறு நிலை

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 61 : தந்தையின் சீற்றம்- தொடர்ச்சி)

          இந்நினை வதனால் ஏங்கி மெலிவது     

          கண்டனன் தந்தை; கடிதினில் இவள்மணம்    50

          கண்டமை வேன்எனக் கொண்டுளங் கருதி

முயல்வுழி, இச்செயல் முழுவதும் உணர்ந்த

கயல்விழி இரங்கிக் கண்ணீர் மல்கிச்

செயலறக் கிடந்தனள் மயலது மிகவே; 

          இனைந்துயிர் மாய இடங்கொடா ளாகி 55

          நினைந்தொரு முடிவு நேர்ந்தனள் மனத்தே;

விடிந்தால் திருநாள் விரைவினில் அனைத்தும்

முடிந்தே எழுவேன் என்மனம் முடுகும்

தையற் றொழில்வலான் தாளென இரவில்     

          தையல் மலரடி விரைந்தன தனிமையில்;        60

          வல்லவன் காதலன் வதியிடன் குறுகி

வில்லவன் றன்பால் நிகழ்ந்தன விளம்பலும்; 

          `அந்தோ! நின்னை அயலவன் மணஞ்செயின்

நொந்தே சாவேன் நொடிப்பொழு தினியிரேன்       

          இந்த உரைசொல வந்தனை யோ’என    65

          வெந்துழல் மனத்தினன் வில்லவன் புலம்ப,    

          `உயிரனை யாய்!நீ உணரா துரைத்தனை!

துயரம் விட்டொழி! துணைவன் நீயே

அயிரேல்! நின்னை அடையே னாயின்  

—————————————————————

          முடுகும் – விரையும், அயிரேல் – ஐயப்படாதே.

++++++++++++++++++++++++++

கயிறே துணையெனக் கருத்தினிற் கொண்டுளேன்’         70

          என்றனள் பொன்னி; இவ்விடை கேட்டு, 

          `நன்றுரை புகன்றனை! நமக்கேன் சாவு?

வென்றுல காள்வோம்; வீணரை எதிர்ப்போம்;

நினைப்பெறின் உலகை நினையேன் மதியேன்;     

          முனைத்தெழு பகையை முறிப்பேன் சிரிப்பேன்;     75         

  நின்னுளம் யாதோ! என்னுளம் வாழ்வோய்!

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்