Posts

Showing posts from August, 2023

தமிழ் வளர்த்த நகரங்கள் 4. – அ. க. நவநீத கிருட்டிணன் : தமிழ் வளர்த்த சங்கங்கள் 1/2

Image
  ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         01 September 2023        அகரமுதல (தமிழ் வளர்த்த நகரங்கள் 3. – அ. க. நவநீத கிருட்டிணன் :. தமிழும் குமரகுருபரரும்-தொடர்ச்சி) அத்தியாயம் 2. தமிழ் வளர்த்த சங்கங்கள் தமிழ்வளர்த்த நாடும் நகரும் தொன்மையும் தூய்மையும் இனிமையும் வளமையும் ஆகிய கலங்களால் தன்னேரிலாது விளங்கும் தமிழைப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்து வளர்த்த காவலர் பாண்டிய மன்னர்களாவர். தமிழகத்தையாண்ட முடிவேந்தர் மூவரும் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் பேணிவந்தனராயினும் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்க்கே உரியதாகும். அதனால் பாண்டிய நாட்டைத் ‘தமிழ்ப் பாண்டி நாடு’ என்றும், அந்நாட்டின் தலைநகராகிய மதுரையினைத் தமிழ் மதுரையென்றும் புலவர்கள் போற்றுவர். “தண்ணர் தமிழளிக்கும் தண்பாண்டி நாடு” என்றே மாணிக்கவாசகர் பாண்டியநாட்டைப் பாராட்டினர். மணிமேகலை ஆசிரியர் “தென்தமிழ் மதுரை” யென்றே மதுரையைக் குறிப்பிட்டார். ‘தமிழ் கெழுகூடல்’ என்று புறநானூறு புகழ்கிறது. சங்கம் பற்றிய சான்றுகள் பாண்டிய மன்னர்கள் பைந்தமிழை வளர்த்தற்கென அமைத்த...

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 52 : அத்தியாயம் 11. தமிழ் மறுமலர்ச்சி 2/3

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         31 August 2023        அகரமுதல (இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 51 : அத்தியாயம் 11. தமிழ் மறுமலர்ச்சி 1/3 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ அத்தியாயம் 11. தமிழ் மறுமலர்ச்சி 2/3 ஆங்கிலம் இன்று உலகப் பொது  மொழியாகக் கருதப்படும் நிலையை அடைந்துள்ளது.  ஆங்கிலேயரை இந் நாட்டினின்றும் விரட்டியவர்கள்கூட ஆங்கிலத்தை விடமாட்டோம் என்று உறுதிபூண்டுள்ளனர் . இந்தியர்க்கு ஆங்கிலமே கண்ணும் காதும் என்று கருதுகின்றனர் பலர். உலக மக்களில் பத்தில் ஒரு பகுதியினர் ஆங்கிலத்துக்கு உரியவராய் இருக்கின்றனர். . (English – speaking people constitute about one tenth of the world’s population – A History of English Language : Page 4). . இத்தகைய உயர்நிலையை அடைந்துள்ள  ஆங்கிலம் ஒரு காலத்தில் அதன் நாட்டிலேயே இகழப்பட்டது. இலத்தீன் மொழியும் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலத்தின் இடத்தில் அமர்ந்து அரசு ஓச்சின. பின்னர் ஆங்கிலேயரிடத்தில் தோன்றிய மொழிப்பற்று வேற்று மொழிகளை அகற்றி ஆங்கிலத்திற்கு உரிய இடத்தை அளித்தது. ...

பூங்கொடி 12 – கவிஞர் முடியரசன்: வடிவேல் படுகொலை

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         30 August 2023        அகரமுதல ( பூங்கொடி  11  – கவிஞர் முடியரசன்:  வள்ளி குறிக்கோள் வாழ்வினள்-  தொடர்ச்சி ) பூங்கொடி பழியுரை   காதை வடிவேல் படுகொலை ஆங்ஙனம் அன்றியும் அரும்பெறற் காதலர், நிலத்தினில் மடமை நிறைந்திடல் கண்டு பகுத்தறி வூட்டும் பகலவன் ஆவர் ; 70 சொல்லின் செல்வர், சோர்விலர், தொண்டர், அல்லும் பகலும் ஆருயிர்த் தமிழே வெல்லும் வகையால் வீரம் விளைத்தவர்; நல்லவர் இவரை நரிக்குணம் விஞ்சிய கொல்லும் பகைக்குணம் கொண்டோர் ஒருசிலர் 75 தூண்டுதல் செய்யத் துணிவுடன் கூடி நீண்ட புளிமரக் கிளைதனில் நேயரை அந்தோ தூக்கி ஆருயிர் வவ்வினர் : இந்தவெந் நிலையில் இசைத்தொழில் புரிவதோ ? மலையுறை அடிகள் வருகை தருதல் வெந்துயர் வாட்ட வேலரின் நினைவால் 80 மனநலி வெய்தி மனையுறை நாளில் நினையா நிலையில் நீளருட் செல்வர் மலையுறை யடிகள் வந்துகின் றருளினர் துயரம் நீங்கச் சொற்றனர் சிலசொல் : (தொடரும்) கவிஞர்   முடியரசன் ,   பூங்கொடி

ஊரும் பேரும் 46 : இரா.பி.சேது(ப்பிள்ளை: கோயிலும் வாயிலும்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         26 August 2023        அகரமுதல ( ஊரும் பேரும் 45 : இரா.பி.சேது(ப்பிள்ளை: தலமும் கோவிலும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 46 கோயிலும் வாயிலும் மாடக்கோயில்     தமிழகத்தில் ஈசனார்க்குரிய கோயில்கள் எண்ணிறந்தன. அவற்றுள் மன்னரும் முனிவரும் எடுத்த கோயில்கள் பலவாகும். சோழ நாட்டை யாண்ட செங்கணான் என்னும் கோமகன் “ எண் தோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது செய்தான் ” என்று திருமங்கையாழ்வார் கூறிப் போந்தார். அம் மன்னன் எடுத்த திருக்கோயில்களைப் பற்றிய சில குறிப்புகள் தேவாரத்தில் உண்டு. தஞ்சை நாட்டைச் சேர்ந்த நன்னிலத்தில் உள்ள பெருங்கோயில் அவன் செய்ததென்று சுந்தரர் தெரிவிக்கின்றார். 1     இன்னும் வைகல் என்னும் பதியிலுள்ள மாடக் கோவில் கோச்செங்கணான் கட்டியதென்பது,          “வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்          செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே ” என்ற திருஞான சம்பந்தர் வாக்கால் விளங்கும். ...