Skip to main content

பொங்கல் வாழ்த்துகள் – த. ஞானசேகரன்

 அகரமுதல




நாளெல்லாம் தமிழ்பேசி பொங்கலிடுங்கள் !

பொங்கலிடுங்கள் ! நீங்கள் பொங்கலிடுங்கள் !

புத்தாண்டு பிறந்ததென்று  பொங்கலிடுங்கள் !

புதுவாழ்வு காணவேண்டி பொங்கலிடுங்கள் !

புதுமை எங்கும் பூத்ததென்று பொங்கலிடுங்கள் !

நாளெல்லாம் தமிழ்பேசி பொங்கலிடுங்கள் !

நானிலத்தில் தமிழ் வளரப் பொங்கலிடுங்கள் !

பாரதியின் கொள்கை வாழப் பொங்கலிடுங்கள் !

பாரதம் செழித்திடவே பொங்கலிடுங்கள் !

சமநீதி காத்திடவே பொங்கலிடுங்கள் !

சமுதாயம் தழைத்திடவே பொங்கலிடுங்கள் !

குறு நோக்கு விலகிடவே பொங்கலிடுங்கள் !

குன்றாத நேயம் வளரப் பொங்கலிடுங்கள் !

தமிழர்தாம் ஒன்றுபடப் பொங்கலிடுங்கள் !

தமிழ்நாடு உயர்ந்திடவே பொங்கலிடுங்கள் !

வள்ளுவர்தம் குறள்நெறியில் வாழ்ந்து பாருங்கள் !

வளமான அறவாழ்வின் மகிழ்ச்சி பொங்குமே !

இனிய பொங்கல் வாழ்த்துகள் !

பொங்கலோ பொங்கல் !

அன்புடன்

த. ஞானசேகரன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்