Skip to main content

மாவீரன் பிரபாகரன் மலர்ந்தொளிர்வர் ! – புலவர் பழ.தமிழாளன்

 அகரமுதல





மாவீரன்   பிரபாகரன்  மலர்ந்தொளிர்வர் !

1.

ஈழமண்ணில்  தமிழ்நாடு மலர்ந்து மணம்   வீச

   வீறுமிகு  பிரபாகர் தலைமைதனை   ஏற்று 

வாழவினம் உயிர்கொடுத்தோர் வரலாற்றில்  நிற்பர் /

     வையகத்தில்  தமிழ்வீரம்  வான்கதிரே  ஒக்கும்

மாழவுமே  வைத்தரச  பச்சையென்பான் ஈழ

    மண்ணைவிட்டே  மறைந்தொழிவான்  மனம்மகிழ  மக்கள்

வாழவந்த  சிங்களத்தை  வசைகூறி   என்றும்

    வையகமே  தூற்றிநிற்கும்  வன்கொலைஞர்  என்றே !

2.

கொலைகார  அரசபச்சே  கொற்றமுமே  ஏறின்

    கொற்றவறம்  அன்னவனைக்  குப்புறவே  வீழ்த்தும்

மலையொக்கும்  பண்பாட்டில்  மலர்ந்து  மணம்  வீசும்

    மாத்தமிழர்  வீழ்ந்தாலும்  மாண்பென்றும்   குன்றார்

நிலைத்தபுகழ்  ஞாலமதில்  தமிழினத்தின்   மார்பில்

    நித்திலப்பூ  மாலையென  ஒளிவீசித்   தோன்றும் 

நிலமுதலாம்  தமிழினத்துப்  பகையெல் லாம்  தூளாய்

    நெடுங்குன்றம்  இடிவீழ்ந்த  நிலையதனை  ஒக்கும் !   

              புலவர் பழ.தமிழாளன்,

       இயக்குநர்—பைந்தமிழியக்கம்,    திருச்சிராப்பள்ளி.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்