Skip to main content

பழுநர் திருமடி சாய்ந்த வெம்புலியே! – தொல்லூர் கிழான்

 அகரமுதல

பழுநர் திருமடி சாய்ந்த வெம்புலியே! – தொல்லூர் கிழான்

பழுநர் திருமடி சாய்ந்த வெம்புலியே!

விரிகடல் கடந்து தண்புலம் ஒரீஇ

உறுநிலம் உறைய புள்பறந்  தற்றே

முதுவர் நீங்கிய ஒற்றை மகவாள்

வதுவைப் பருவத்து  துடிஇடை முளையல்

அரிப்படை நடுக்கிய பெரும்போ ருடற்றியான்

வரிப்படை வேட்புற காந்த ளகத்து

மகற்படை அன்ன மகட்படை மறவம்

அகத்தே   உயிர்த்த அறநெறி தழீஇ

விழுப்புண் ஏற்றனள் தெவ்வர் நூறி

பழுநர் திருமடி சாய்ந்தவெம் புலியே

தொல்லூர் கிழான்

விரிகடல் கடந்து = எங்கும் புடைபரப்பி விரிந்திருக்கும் பெருங்கடல் கடந்து;

தண்புலம் ஒரீஇ = குளிர்பொருந்திய நிலத்தை விட்டு நீங்கி;

உறுநிலம் உறைய = உண்மையில் வாழ வேண்டிய உற்ற நிலம் நோக்கி;

புள்பறந்  தற்றே = பறந்து  வந்த பறவையைப் போல;

முதுவர் நீங்கிய  = தன்னை ஈன்றெடுத்த தாய் தந்தையரை விட்டு நீங்கிய;

ஒற்றை மகவாள் = அவர்களுக்குப் பிறந்த ஒரே ஒரு பெண் குழந்தையாள்;

வதுவைப் பருவத்து  = திருமணப் பருவம் எய்திய;

துடிஇடை முளையல் = சிறுத்த இடை உடைய இளைய நங்கை;

அரிப்படை நடுக்கிய = சிங்களப் படையை நடுக்கத்தில் ஆழ்த்திய;

பெரும்போ ருடற்றியான் = மிகப் பெரும் போரினை நிகழ்த்திய பெருந்தலைவன்;

வரிப்படை வேட்புற = புலிப்படையில் சேர்ந்து போரிட மிகவும் விரும்பி;

காந்த ளகத்து = காந்தள் மலர் சிறப்பாய்ப் பூக்கும் ஈழ திருநாட்டிற்கு;

மகற்படை அன்ன  = வீரஞ் செறிந்த ஆண்கள் படைக்கு நிகரான;

மகட்படை மறவம் = பெண்கள் படையின் மாபெரும் வீரம்;

அகத்தே   உயிர்த்த = இயல்பாகவே அந்த மண்ணில் உயிர்த்திருக்கும்;

அறநெறி தழீஇ = அத்தகு போர் அற நெறியை உளமார ஏற்றுக் கொண்டு;

விழுப்புண் ஏற்றனள்  = போர் புரிந்து விழுப்புண் தாங்கி;

தெவ்வர் நூறி = எதிர் நின்ற பகைவரையும்  துடைத்தொழித்து;

பழுநர் திருமடிச்  = மிகவும் முதிர்ந்த தமக்கும் மேலான போரில் பழுன முற்ற தளபதியின் மடியில்;

சாய்ந்தவெம் புலியே = தலை வைத்துப் படுத்து உயிர் துறந்த  சினமிக்க   வீறுகொண்ட புலிமகள் அவள்…

பொழிப்பு :

எங்கும் புடைபரப்பி விரிந்திருக்கும் பெருங்கடல் கடந்து,  குளிர்பொருந்திய நிலத்தை விட்டு நீங்கி உண்மையில் வாழ வேண்டிய உற்ற நிலம் நோக்கி

 பறந்து  வந்த பறவையைப் போலத் தன்னை ஈன்றெடுத்த தாய் தந்தையரை விட்டு நீங்கிய அவர்களுக்குப் பிறந்த ஒரே ஒரு பெண் குழந்தையானவள் திருமணப் பருவம் எய்திய சிறுத்த இடை உடைய இளைய நங்கை சிங்களப் படையை நடுக்கத்தில் ஆழ்த்திய மிகப் பெரும் போரினை நிகழ்த்திய பெருந்தலைவன் புலிப்படையில் சேர்ந்து போரிட மிகவும் விரும்பி, காந்தள் மலர் சிறப்பாய்ப் பூக்கும் ஈழ திருநாட்டிற்கு வந்து , வீரஞ் செறிந்த ஆண்கள் படைக்கு நிகராகப் போர் புரியும்  பெண்கள் படையின் மாபெரும் வீரம் இயல்பாகவே அந்த மண்ணில் உயிர்த்திருக்கும் அத்தகு போர் அற நெறியை உளமார ஏற்றுக் கொண்டு போர் புரிந்து விழுப்புண் தாங்கி  எதிர் நின்ற பகைவரையும்  துடைத்தொழித்து மிகவும் முதிர்ந்த தமக்கும் மேலான போரில் பழுன முற்ற தளபதியின் மடியில் தலை வைத்துப் படுத்து உயிர் துறந்த  சினமிக்க   வீறுகொண்ட புலிமகளே அவள்.

விளக்கம் :

ஈழத்துப் போர் நிகழ்ந்த சூழலில் தொடக்கக் காலக் கட்டத்தில் தற்காப்பு நிமித்தமாய் மக்கள் பலரும் அயல் நாடு ஏகினர்.  அப்படி ஏகிய  குடும்பத்தில் ஒரே ஒரு பெண்மகவாய்ப்  பிறந்த இளம்பெண் ஒருத்தி.. தாய் நாட்டுச் செய்திகளை மனத்தில் தாங்கி மண் மீட்புப் போரில் ஈடுபட விரும்புகின்றாள். அவளை ஈன்றோர் அகவை முதிர்ந்திருத்தனர். திருமண அகவையை எட்டிய இளம் அகவையினள் அவள்.

அகவை முதிர்ந்த பெற்றோரை விடுத்து , அவள் போர்க்களம் பூண்ட தாயகத்திற்குப் புறப்படுகின்றாள்.

தாயகத்தில், ஆண்களுக்கு நிகராகப் போர் புரியும் பெண்கள் படையணியில் இணைந்து  முறையாகப் பயிற்சியையும் பெறுகிறாள்.

போரில் தளபதிமார்களின் கட்டளைக்கிணங்க முழுமூச்சுடன் போரிடுகின்றாள். அவளுக்கும்  மூத்த தளபதியாய் விளங்கிய பெரியவர் ஒருவர் .. அவள் தந்தையைப் போல் விளங்குபவர்; அவரைத் தந்தையின் நினைவாக அப்பா அப்பா என்றே அழைப்பாள்..

ஒரு நாள் கடும்போர் நிகழ்ந்தது.. அவள் வியக்கத் தக்க வகையில் போரிடுகின்றாள்; எதிரிகள் திக்கு முக்காடுகின்றனர்.. திடீரென போர்க்களத்தில் எதிரியின் குண்டு வீச்சு அவளின் மார்பைத் துளைக்கின்றது.  அவள் வீழ்ந்து உயிருக்குப் போராடினாள்..

மருத்துவப் போராளிகள், அவளைத் தூக்கிக் கொண்டு .. தந்தைபோல் விளங்கும் பெரியவரிடம் கொணர்கின்றனர்.. அவள் பெரியவரின் கால் மடியில் படுத்து அப்பா… அப்பா என்கிறாள்.. பெரியவர்.. அவள் தலைமேல் கைவைத்து நீவி விடுகின்றார். அவள் பெரியவரின் கையைப் பற்றிக் கொண்டு அப்பா எனச் சொல்லிய படியே உயிர் துறக்கின்றாள்… பெரியவரின் கண்ணீர்த் துளிகள் அவள் மீது விழுகின்றன…

( இப்பாடல் ஓர் உண்மைப் போர்க்களச் சூழலைத் தழுவியது. மகளின் வீரச்சாவு செய்தி அறிந்த வெளிநாட்டில் வாழும் அப்பெண் போராளியின் அகவை முதிர்ந்த பெற்றோர் அதிர்ந்து போகின்றனர். மகளின் பிரிவாற்றாமையால் அவர்களும் நோய்வாய்ப் பட்டு படுக்கையில் சாய்கின்றனர்… )

தொல்லூர் கிழான்

ஐயா, சில திருத்தங்களை இவ்வாறு செய்ய வேண்டுகிறேன்.. 👇🏻

பழுநர் திருமடி சாய்ந்த வெம்புலியே!

விரிகடல் கடந்து தண்புலம் ஒரீஇ

உறுநிலம் உறைய புள்பறந்  தற்றே

முதுவர் நீங்கிய ஒற்றை மகவாள்

வதுவைப் பருவத்து  துடிஇடை முளையல்

அரிப்படை நடுக்கிய பெரும்போ ருடற்றியான்

வரிப்படை வேட்புற காந்த ளகத்து

மகற்படை அன்ன மகட்படை மறவம்

அகத்தே   உயிர்த்த அறநெறி தழீஇ

விழுப்புண் ஏற்றனள் தெவ்வர் நூறி

பழுநர் திருமடி சாய்ந்தவெம் புலியே

தொல்லூர் கிழான்

விரிகடல் கடந்து = எங்கும் புடைபரப்பி விரிந்திருக்கும் பெருங்கடல் கடந்து

தண்புலம் ஒரீஇ = குளிர்பொருந்திய நிலத்தை விட்டு நீங்கி

உறுநிலம் உறைய = உண்மையில் வாழ வேண்டிய உற்ற நிலம் நோக்கி

புள்பறந்  தற்றே = பறந்து  வந்த பறவையைப் போல

முதுவர் நீங்கிய  = தன்னை ஈன்றெடுத்த தாய் தந்தையரை விட்டு நீங்கிய

ஒற்றை மகவாள் = அவர்களுக்குப் பிறந்த ஒரே ஒரு பெண் குழந்தையாள்

வதுவைப் பருவத்து  = திருமணப் பருவம் எய்திய

துடிஇடை முளையல் = சிறுத்த இடை உடைய இளைய நங்கை

அரிப்படை நடுக்கிய = சிங்களப் படையை நடுக்கத்தில் ஆழ்த்திய

பெரும்போ ருடற்றியான் = மிகப் பெரும் போரினை நிகழ்த்திய பெருந்தலைவன்

வரிப்படை வேட்புற = புலிப்படையில் சேர்ந்து போரிட மிகவும் விரும்பி

காந்த ளகத்து = காந்தள் மலர் சிறப்பாய்ப் பூக்கும் ஈழ திருநாட்டிற்கு

மகற்படை அன்ன  = வீரஞ் செறிந்த ஆண்கள் படைக்கு நிகரான

மகட்படை மறவம் = பெண்கள் படையின் மாபெரும் வீரம்

அகத்தே   உயிர்த்த = இயல்பாகவே அந்த மண்ணில் உயிர்த்திருக்கும்

அறநெறி தழீஇ = அத்தகு போர் அற நெறியை உளமார ஏற்றுக் கொண்டு

விழுப்புண் ஏற்றனள்  = போர் புரிந்து விழுப்புண் தாங்கி

தெவ்வர் நூறி = எதிர் நின்ற பகைவரையும்  துடைத்தொழித்து

பழுநர் திருமடி  = மிகவும் முதிர்ந்த தமக்கும் மேலான போரில் பழுன முற்ற தளபதியின் மடியில்

சாய்ந்தவெம் புலியே = தலை வைத்துப் படுத்து உயிர் துறந்த  சினமிக்க   வீறுகொண்ட புலிமகள் அவள்…

பொழிப்பு :

எங்கும் புடைபரப்பி விரிந்திருக்கும் பெருங்கடல் கடந்து,  குளிர்பொருந்திய நிலத்தை விட்டு நீங்கி உண்மையில் வாழ வேண்டிய உற்ற நிலம் நோக்கி,  பறந்து  வந்த பறவையைப் போல தன்னை ஈன்றெடுத்த தாய் தந்தையரை விட்டு நீங்கிய அவர்களுக்குப் பிறந்த ஒரே ஒரு பெண் குழந்தையானவள் திருமணப் பருவம் எய்திய சிறுத்த இடை உடைய இளைய நங்கை சிங்களப் படையை நடுக்கத்தில் ஆழ்த்திய மிகப் பெரும் போரினை நிகழ்த்திய பெருந்தலைவன் புலிப்படையில் சேர்ந்து போரிட மிகவும் விரும்பி காந்தள் மலர் சிறப்பாய்ப் பூக்கும் ஈழ திருநாட்டிற்கு வந்து , வீரஞ் செறிந்த ஆண்கள் படைக்கு நிகராகப் போர் புரியும்  பெண்கள் படையின் மாபெரும் வீரம் இயல்பாகவே அந்த மண்ணில் உயிர்த்திருக்கும் அத்தகு போர் அற நெறியை உளமார ஏற்றுக் கொண்டு போர் புரிந்து விழுப்புண் தாங்கி  எதிர் நின்ற பகைவரையும்  துடைத்தொழித்து மிகவும் முதிர்ந்த தமக்கும் மேலான போரில் பழுன முற்ற தளபதியின் மடியில் தலை வைத்துப் படுத்து உயிர் துறந்த  சினமிக்க   வீறுகொண்ட புலிமகளே அவள்…

விளக்கம் :

ஈழத்துப் போர் நிகழ்ந்த சூழலில் தொடக்கக் காலக் கட்டத்தில் தற்காப்பு நிமித்தமாய் மக்கள் பலரும் அயல் நாடு ஏகினர்.  அப்படி ஏகிய  குடும்பத்தில் ஒரே ஒரு பெண்மகவாய்ப்  பிறந்த இளம்பெண் ஒருத்தி.. தாய் நாட்டுச் செய்திகளை மனத்தில் தாங்கி மண் மீட்புப் போரில் ஈடுபட விரும்புகின்றாள். அவளை ஈன்றோர் அகவை முதிர்ந்திருத்தனர். திருமண அகவையை எட்டிய இளம் அகவையினள் அவள்.

அகவை முதிர்ந்த பெற்றோரை விடுத்து , அவள் போர்க்களம் பூண்ட தாயகத்திற்குப் புறப்படுகின்றாள்.

தாயகத்தில், ஆண்களுக்கு நிகராகப் போர் புரியும் பெண்கள் படையணியில் இணைந்து  முறையாகப் பயிற்சியையும் பெறுகிறாள்.

போரில் தளபதிமார்களின் கட்டளைக்கிணங்க முழுமூச்சுடன் போரிடுகின்றாள். அவளுக்கும்  மூத்த தளபதியாய் விளங்கிய பெரியவர் ஒருவர் .. அவள் தந்தையைப் போல் விளங்குபவர்; அவரைத் தந்தையின் நினைவாக அப்பா அப்பா என்றே அழைப்பாள்..

ஒரு நாள் கடும்போர் நிகழ்ந்தது.. அவள் வியக்கத் தக்க வகையில் போரிடுகின்றாள்; எதிரிகள் திக்கு முக்காடுகின்றனர்.. திடீரென போர்க்களத்தில் எதிரியின் குண்டு வீச்சு அவளின் மார்பைத் துளைக்கின்றது.  அவள் வீழ்ந்து உயிருக்குப் போராடினாள்..

மருத்துவப் போராளிகள், அவளைத் தூக்கிக் கொண்டு .. தந்தைபோல் விளங்கும் பெரியவரிடம் கொணர்கின்றனர்.. அவள் பெரியவரின் கால் மடியில் படுத்து அப்பா… அப்பா என்கிறாள்.. பெரியவர்.. அவள் தலைமேல் கைவைத்து நீவி விடுகின்றார். அவள் பெரியவரின் கையைப் பற்றிக் கொண்டு அப்பா எனச் சொல்லிய படியே உயிர் துறக்கின்றாள்… பெரியவரின் கண்ணீர்த் துளிகள் அவள் மீது விழுகின்றன…

( இப்பாடல் ஓர் உண்மை போர்க்களச் சூழலைத் தழுவியது.. மகளின் வீரச்சாவு செய்தி அறிந்த வெளிநாட்டில் வாழும் அப்பெண் போராளியின் அகவை முதிர்ந்த பெற்றோர் அதிர்ந்து போகின்றனர். மகளின் பிரிவாற்றாமையால் அவர்களும் நோய்வாய்ப் பட்டு படுக்கையில் சாய்கின்றனர். )

தொல்லூர் கிழான்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்