பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 4
அகரமுதல ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 01 December 2022 No Comment (புதிய புரட்சிக்கவி- களம் : 1 காட்சி : 3 – தொடர்ச்சி ) புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 4 முச்சந்தியில் மோனைப் புலவன் நிற்க ; இளவரசியின் தோழி அல்லி வருகிறாள் அகவல் மோனை : பாளைச் சிரிப்பிலே பாவிஎன் ஆவியைப் பதைக்க வதைக்கும் பாவாய் அல்லி பாதையில் மேதிபோல் பாவியேன் நிற்கவும் பார்த்தும் பாராது பால்முகம் திருப்பிப் பதைப்புடன் எங்கே பாய்கிறாய்? நின்று முத்து விளையாட் டொன்றுஎன் முகத்தில் மெத்தென் றாடினால் மேனியா குறையும்? அல்லி : ...