இலக்கியம் கூறும் தமிழர் கல்வி (சங்கக் காலம்) – சி.இலக்குவனார்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 01 August 2021 No Comment ( இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் ( சங்கக் காலம் ) 13 – தொடர்ச்சி ) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் ( சங்கக் காலம் ) 14 6. கல்வி பழந்தமிழ் நாட்டில் கல்வியின் சிறப்பை யாவரும் உணர்ந்திருந்தனர். கல்வியற்ற மக்களை விலங்குகளோ டொப்பவே கருதினர் என்பது, “ விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் ” ( குறள்-410) என்னும் வள்ளுவர் வாய்மொழியால் அறியலாகும். அரசரும் இவ் வுண்மை தெளிந்து தம் கடனாற்றினார் என்பது பின்வரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றால் தெளியலாகும். “ உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் ...