Skip to main content

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 7 & 8



அகரமுதல 171, தை 16, 2048 / சனவரி 29, 2017

திருத்தமிழ்ப்பாவை 7 & 8
ஏழாம் பாசுரம்
தமிழ் இலக்கிய வரலாறு

பாட்டும், தொகையும், கணக்கும், நுதல்மீது
தீட்டும் சமயமிரண் டூட்டும் இலக்கியமும்,
நாட்டும் பெருஞ்,சிறு நல்லணிஐங் காப்பியமும்,
வாட்டும்போர் பாடும் பரணியொடு, தூது,உலா
கூட்டும் சுவைபிள்ளை, பள்ளு, கலம்பகமென்
றேட்டில் புகழ்சிற் றிலக்கியமாய் ஏத்த,பிற
நாட்டு மதநூல்கள், நல்லுரைகள், சொல்லெளிய
பாட்டு, கவி, கூத்துதமிழ் போற்றடவா,
எம்பாவாய்!

எட்டாம் பாசுரம்
தொல்காப்பியம் தமிழின் முதுகெலும்பு நூல் !
செந்தமிழின் தண்டெலும்பு தொல்காப்
பியப்பெருநூல் !
சங்கம் இடைநிலை சார்ந்த இலக்கணநூல் !
மங்கா இலக்கியமாய் மாண்புறும் மூத்தநூல் !
எம்மொழியும் காணாத் திணை, துறை
வாழ்வியலின்
செம்மாந்த நந்தமிழர் நாகரிகச் சீருரைக்கும் !
முன்னர்ப் பெரும்புலவோர் நூலாய்ந்தே
செய்தமையான்
‘என்மனார்’ என்றேதொல் காப்பியனார்
சுட்டிநின்றார் !
கண்மலர் பூத்தந்நூல் கற்போம்வா, எம்பாவாய் !


கவிஞர் வேணு குணசேகரன்

– கவிஞர் வேணு குணசேகரன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்