Posts

Showing posts from February, 2017

நன்மை நீஇ! தின்மை நீஇ!

Image
அகரமுதல 175, மாசி 14 , 2048 / பிப்பிரவரி 26 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      26 பிப்பிரவரி 2017       கருத்திற்காக.. நன்மை நீஇ!  தின்மை நீஇ! நன்மை நீஇ;  தின்மை நீஇ; நனவு நீஇ; கனவு நீஇ; வன்மை நீஇ; மென்மை நீஇ; மதியு நீஇ; விதியு நீஇ; இம்மை நீஇ; மறுமை நீஇ; இரவு நீஇ; பகலு நீஇ; செம்மை நீஇ; கருமை நீஇ; சேர்வு நீஇ; சார்வு நீஇ; நீலகேசி உரை பெருந்தொகை தொகுப்பு: மு.இராகவையங்கார்: பக்கம் 187

நல்லவளே எழுந்திடடி சூரியனை மீட்டிடவே! – செந்தமிழினி பிரபாகரன்

Image
அகரமுதல 175, மாசி 14 , 2048 / பிப்பிரவரி 26 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      26 பிப்பிரவரி 2017       கருத்திற்காக.. நல்லவளே எழுந்திடடி சூரியனை மீட்டிடவே! ஆராரோ ஆரிரரோ ஆராரோ யார் இவரோ? ஆராரோ நிலம் பறிக்க ஆராரோ அழுகின்றோம். கண்ணே நீ விழித்து விடு கண்ணீரை விட்டு விடு காலம் எங்கள் வசமாகும். அழுவதை நிறுத்தி விடு சொந்த மண்ணில் படை வரலாம் வெந்த புண்ணில் சீழ் வரலாம் ஆர் ஆற்றி தீருமம்மா ஆறாத எம் துயரம்? எமக்காக குரல் கொடுக்க எவர் குரலும் இரங்கவில்லை எதிர்காலம் இருண்டிடினும் எதிர் கொண்டு வெல்வோமடி! கண்ணே நீ எழுந்திடம்மா கண் விழித்துப் போராடு கண்ணுறங்க நேரமில்லை காலம் எம்மை அழைக்கிறது ஆராரோ யார் இவரோ? தாய் மானம் காப்பவரோ? தாய் நாடு மீட்டிடவே தாலாட்டை மறந்தவரோ? நாளை ஒரு காலம் வந்து நம் நிலத்தில் உறங்கிடலாம் நல்லவளே எழுந்திடடி சூரியனை மீட்டிடவே! தேசத்தின் இருள் எல்லாம் தேகத்தின் உழைப்பாலே தேய்த்து அழித்திடுவோம் தேனிலவே எழுந்திடம்மா! ஆராரோ ஆர் இவரோ? ஆரிங்கு இரங்குவாரோ? ஆரின்றி போனாலும் ஆ...

சுந்தரச் சிலேடைகள் – மாணவரும் ஆடும்

Image
அகரமுதல 175, மாசி 14 , 2048 / பிப்பிரவரி 26 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      26 பிப்பிரவரி 2017       கருத்திற்காக.. சுந்தரமூர்த்தி கவிதைகள் சுந்தரச் சிலேடைகள் மாணவரும் ஆடும் சிலேடை 1 அடைந்திருக்கும் ஓரிடத்தில் ஆளின்றேல் தாவும் கடைநிலையிற் கொம்படிக்கும் கத்தும்-இடைநின் றிழுக்க அசைபோட் டிறுதி விருந்தாம் எழுத்தறி வானாட்டுக் கீடு. பொருள் மாணவர்=வகுப்பறையில் அனைவரும் இருப்பர். ஆசான் இல்லாதபோது இங்குமங்கும் விளையாடுவர். படிக்காத கடை மாணவர் கொம்பால் அடிவாங்குவர். பள்ளிவராமல் உள்ளோர் சகமாணவர்களால் இழுத்து வரப்படுவர். அழுவர். கற்றதை அசைபோடுவர்.பின்னாளில் நல்ல விருந்தளிப்பர். ஆடு=கொட்டகையில் அடைந்து கிடக்கும். ஆளில்லை என்றால் இங்குமங்கும் தாவும் சேட்டை செய்யும் , சண்டையிடும் , கொம்பால் முட்டிக்கொள்ளும்.இடையிலே நின்றுபோனால் இழுத்துவந்து சேர்ப்பர்.கத்தும் , தின்றதை அசைபோடும் , கொழுத்து இரையாகும். கட்டிக்குளம் ஒ .சுந்தரமூர்த்தி