அயலவரின் முதல் தமிழ்க்கையேடு – 3 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்
இலக்குவனார் திருவள்ளுவன் 29 March 2015 No Comment (பங்குனி 8, 2045 / மார்ச்சு 22, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 3 (இலக்கணத்தின் அமைப்பு) “கையேட்டின் அமைப்பு” போர்த்துக்கீசியப் பாதிரியார் அன்றீக்கு அடிகளார் “மலபார் மொழிக் கருவி /Arte Da Lingua Malabar” என்ற நூலைக் கையால் எழுதினார் என்று தெரிகிறது. கையேட்டில் சில இடங்களில் இரண்டு வகைக் கையெழுத்து இருப்பது தெரிகிறது. இந்தக் கையேட்டை உருவாக்க இதை மேலும் ஆராய்ந்தால் இதைப் பற்றிய விளக்கம் கிடைக்கலாம். நிற்க. பாதிரியாரின் கடமை: முத்துக்குளித்துறையில் புழங்கிய தமிழைப் படித்துத் தான் புரிந்துகொண்டபடி அந்தத் தமிழைப் பிற பாதிரிமாருக்கு விளக்க வேண்டும். அவர்கள் எல்லாருக்கும் இடையில் ஒரு பொதுக்களம் அமையவேண்டும். பொதுவான விளக்கமுறையும் தேவை. அதற்காக, இலத்தீன் மொழியின் இலக்கணம் இவருக்கு உதவுகிறது. இலத்தீன் இலக்கணக் கூறுகளின் வழியாகத் தமிழை விளக்குகிறார...