இந்தியை ஏன் கற்க வேண்டும் ? – பாவாணர்
தமிழ் மாணவன் தன் பெற்றோரை வினவல்
“கழுகுமலை குருவிகுளம்” என்ற மெட்டு வகை
ப.
இந்தியை ஏன்கற்க வேண்டும்என்அம்மா என்அப்பா நான்
(இந்தி)
உ.1
என்கருத்தைத் தெரிவிக்க என்மொழி யொன்றில்லையாபொன்மணிபோற் சொற்களே பொலியுந்தமிழ் இருக்கையிலே
(இந்தி)
2
அறிவியற்கே ஆங்கிலம் அளவில்லாநூல் அளிக்கவும்வெறுமையுற்ற கலமென விழுமியநூல் எதுமிலாத
(இந்தி)
3
அடிமைநாளில் அயன்மொழி அறிந்துவந்தோம் என்கின்றார்உரிமைவந்த பின்னரும் உறவில்லாத வடநிலத்து
(இந்தி)
வரவரவே வாழுநாள் வரம்புகுன்றி வருகையில் அறிவியற்கே நிறைவிலா அரியகாலம் பயனறவே
(இந்தி)
5
ஆரியத்தால் செந்தமிழ் அடைந்ததுபல் கேடுகள்சீரியநல் எச்சமும் சிதையும்வகை மதியிலாது
(இந்தி)
6
இந்தி யில்லாப் பள்ளியே இந்தநாட்டில் இல்லையேல்
அந்த நாள் வரும்வரை அகத்திருந்தே கற்றிடுவேன்
(இந்தி)
7
மானமும்தன் மானமும் மருவுதமிழ் மாணவர்தானையிலே சேர்ந்துநான் தண்டமிழைக் காத்திடுவேன்
(இந்தி)
- ஞா. தேவநேயப் பாவாணர் : இசைத்தமிழ்க் கலம்பகம் : பாடல் 203
Comments
Post a Comment