நாள்தோறும் நினைவில் 6 : வளம்பறிக்கும் நிலை – சுமதி சுடர்


Sudar8b

வளம்பறிக்கும் நிலை

வளம்பறித்து வாழ்பவர்கள் மனம்விரியாச் சிலர்தான்
வறியவர்கள் பெருகிவரக் காரணமும் இவர்தான்
உளச்சோம்பல் உடற்சோம்பல் போக்காமல் வாழ்ந்தால்
உற்றாரைத் தளைப்படுத்தி உலகவாழ்வை முடிப்போம்
உளம்சுருங்கும் உறவுபொய்க்கும் சினம்பெருகும் நாளும்
உருக்குலையும் சேர்த்தபொருள் ஓயாத இடர்தான்
வளம்காக்க போராட்டம் முறையற்ற வாழ்க்கை
வாழ்வறியார் அடியொற்றி வாழ்பவரும் உண்டு

 – சுமதி சுடர், பூனா



Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்