சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு – பாவாணர்
சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு – பாவாணர்
பண் – (நாதநாமக்கிரியை)
தாளம் – முன்னை
ப.
தீக்குளித்தே யிறந்தான் – சின்னச்சாமிதீக்குளித்தே யிறந்தான் – திடுக்கிடத்
து. ப.
தாக்கும் இந்திவந்து தண்டமிழ் கெடுமென்றுதன்மானந் ததும்பியே தாங்கருந் துயர்கொண்டு
(தீக்)
உ.1
ஆர்க்குஞ் சொல்லாமல்தன் அகத்தைவிட் டுச்சென்றேஅழகிய திருச்சியில் அமைகூடல் நிலையத்தில்
வார்த்தனன் கன்னெய்மேல் வைத்தனன் தீயும்பின்
வடிவொரு சுடரென வானவர் விருந்தெனத்
(தீக்)
2
நாடென்றும் இனமென்றும் நம்புந்தன் மதமென்றும்நானிலத்தே மாந்தர் நல்குவர் உடல்வேக
ஈடொன்று மில்லாமல் இனியதாய் மொழிக்கென்றே
ஈந்துநல் வலவுடல் இளமையில் உயர்வாகத்
(தீக்)
3
வெந்தெரி யுடலெல்லாம் விளம்பறு வேதனைவிருவிருத் தேறினும் வீறுகொண் டேறென
எந்தமிழ் வாழ்கவே இந்தியே ஒழிகென
இறுதி வரைகூறி இதுவேநல் லாறெனத்
(தீக்)
4
பைந்தமிழை முன்காட்டிப் பகைவ ரிடங்கொடுத்துப்பணங்கொழுக் குந்தலைமைப் பண்பற்றபே ராசான்மார்
ஐந்தாம் வகுப்பே கற்றோன் அடைந்தபண் பாடுமின்றி
அஃறிணை யாயிருத்தல் அறிவாரெல் லாருந்தான் பார்
(தீக்)
5
எருமைபோல் உணர்வின்றி என்றும்கீழ் அடிமையாய்இருந்தேகும் தமிழாநீ இனியேனும் மடந்தீரப்
பெருமைபேர் எழுதிக்கல் பெருஞ்சின்னச் சாமிக்குப்
பிறைமாடக் கோயிற்கண் பெயராது நடவாராய்
(தீக்)
- ஞா. தேவநேயப் பாவாணர்,
இசைத்தமிழ்க் கலம்பகம் : பாடல் 195
Comments
Post a Comment