Posts

Showing posts from January, 2015

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 8 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      25 சனவரி 2015       கருத்திற்காக.. ( தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி) காட்சி – 8 (நாடகக் காட்சி – 2) அங்கம்   :     அருண் மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (இல்லாளும் நானென இன்பம் பொழிகின்ற பூங்குயில் கண்டு தலைவனும் நானென அருணும் நவின்றிடும் முறையே இங்கு) அருண்    :     மலரே நீ வருவாய்! தாள்கொஞ்சம் திறவாய்! கள்வனோ அல்ல;                                                                ...

சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு – பாவாணர்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      25 சனவரி 2015       கருத்திற்காக.. சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு – பாவாணர் பண் – (நாதநாமக்கிரியை) தாளம் – முன்னை ப.             தீக்குளித்தே யிறந்தான் – சின்னச்சாமி               தீக்குளித்தே யிறந்தான் – திடுக்கிடத் து. ப.             தாக்கும் இந்திவந்து தண்டமிழ் கெடுமென்று                தன்மானந் ததும்பியே தாங்கருந் துயர்கொண்டு (தீக்) உ.1             ஆர்க்குஞ் சொல்லாமல்தன் அகத்தைவிட் டுச்சென்றே             அழகிய திருச்சியில் அமைகூடல் நிலையத்தில்          ...

இந்தியை ஏன் கற்க வேண்டும் ? – பாவாணர்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      25 சனவரி 2015       கருத்திற்காக.. தமிழ் மாணவன் தன் பெற்றோரை வினவல்  “கழுகுமலை குருவிகுளம்” என்ற மெட்டு வகை ப.             இந்தியை ஏன்கற்க வேண்டும்                 என்அம்மா என்அப்பா நான் (இந்தி) உ.1      என்கருத்தைத் தெரிவிக்க என்மொழி யொன்றில்லையா         பொன்மணிபோற் சொற்களே பொலியுந்தமிழ் இருக்கையிலே (இந்தி) 2       அறிவியற்கே ஆங்கிலம் அளவில்லாநூல் அளிக்கவும்                 வெறுமையுற்ற கலமென விழுமியநூல் எதுமிலாத (இந்தி) 3      அடிமைநாளில் அயன்மொழி அறிந்துவந்தோம் என்கின்றார்           ...

தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார் - கவிஞர் இன்குலாபு

Image
தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார் - கவிஞர் இன்குலாபு தமிழை இனிமை என்றனர் பாவலர்கள் தமிழைப் புகழ் என்றனர் புலவர்கள் தமிழைத் தன்மானம் என்றவர் இலக்குவனார் ! தமிழ் விழிப்புற்றது பாரதியால் தமிழ் எழுச்சி பெற்றது பாரதிதாசனால் தமிழ் போராடியது இலக்குவனாரால் எந்த ஓர் அரசமஞ்சத்திலும் ஏறத் தகுந்தவர் எந்த ஓர் அரசும் சாமரம் வீசுதற்குரியவர் இருந்தும் எல்லா அரசுகளும் இலக்குவனார்க்குச் சிறையையே திறந்தன ! எல்லா அரசுகளும் இவர்மீது உறைவாளையே உருவின ! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று தொன்று தமிழருக்கு நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்த இந்தத் தொல்காப்பியருக்கு சிறையும்   உறைவாளும் “ மாசில் வீணையும் மாலை மதியமும் ” ! சில முகவரிகள் தவறாக அமைகின்றன பறவைக்குக் கூண்டு காவிரிக்குக் கருநாடகம் தமிழ்நாட்டுக்கு இந்தியா ! ஆனால் தமிழுக்கு வாய்த்த சரியான முகவரி தியாகராசர் கல்லூரி மதுரை. ஒருபுறம் ஆற்றுநீர் வற்றினாலும் ஊற்றுநீர் வற்றாத அழகிய வைகைஅந்த மணலுக்கடியில் எப்...