புரட்சியாளர்கள்


புரட்சியாளர்கள்

Bharathiyar_periyarandanna02
  உலகில் அறியாமை மிகுந்து மூடக் கொள்கைகள் நிறைந்து அடிமை வாழ்வில் அல்லலுற்று உரிமையிழந்து உண்பதும் உறங்குவதுமே பெரிதெனக்கருதி வாழ்வின் உண்மைக் குறிக்கோளை மறந்து மானமிழந்து மக்கள் வாழுங்காலங்களில் எல்லாம் புரட்சியாளர்கள் தோன்றுகின்றார்கள். புரட்சியாளர்களால்தான் உலகம் செம்மை நிலையை நாடிச் செல்கின்றது. புரட்சியாளர் பட்டுண்டுலகம், அஃதின்றேல் மண்புக்கு மாய்வதுமன்’ என்று தான் கூறல் வேண்டும். சாக்ரிடீசு, இயேசு, மார்க்சு, உரூசோ, மகம்மது போன்ற வெளிநாட்டுப் புரட்சியாளர்களும், புத்தர், திருவள்ளுவர், கபிலர், சாந்தி போன்ற நம் நாட்டுப் புரட்சியாளர்களும் தோன்றியிராவிடின் மக்கள் நிலை மாக்கள் நிலையில்தான் இருக்கும். ஆகவே புரட்சியாளர்களின் நற்றொண்டை நாம் கருதிப்போற்றுதல் வேண்டும். ‘புரட்சி ஓங்குக’வென அவர்தம் புகழ்பாடுதல் வேண்டும்.
  நிகழ்ந்து கொண்டிருக்கும் செப்டம்பர்த் திங்கள் பேறு பெற்ற ஒன்றாகும். இத்திங்கள் பதினோராம் நாள் செந்தமிழ்ப் புலவன் பாரதியின் நினைவுக்குரியது; பதினைந்தாம்நாள் அறிஞர் அண்ணாவின் பிறந்த திருநாளாகும். பதினேழாம் நாள் இந்தநாட்டு உரூசோ எனப் போற்றப்பட்ட பெரியார் அவர்கள் இவ்வுலகில் தோன்றிய பெருநாளாகும். இவர்கள் மூவரும் நம் நாட்டுக்கு ஆற்றிய, ஆற்றி வரும் உயர் தொண்டினைப் பாராட்டுதல் நம்கடனாகும். இம்மூவரும் தமிழர் மறையாம் திருக்குறள் பால் தீரா அன்புடையவர்கள் என்பதை நாடு நன்கறியும். ஆதலின் ‘குறள் நெறி’ இவர்களைப் போற்றும் முகத்தான் சிறப்பு மலராக வெளிவருவது மிகவும் சிறப்புடைத்தன்றோ?
  பாவலர் பாரதியார் அவர்கள் காலப் புலவர்களைப் போன்று செல்வர்களின் புகழ்பாடிச் செல்வத்தைப் பெற்று வாழ்ந்து விட்டுச் சென்றாரிலர். நாட்டுரிமை வேட்கையில் நாட்டங்கொண்டு, அயலவர் ஆட்சியை அகற்றும் உரிமைப்போரில் அஞ்சாது ஈடுபட்டார். ‘‘அச்சமில்லை, அச்சமில்லை; அச்சம் என்பது இல்லையே; உச்சி மீது வானிடிந்த போதிலும் அச்சம் என்பது இல்லையே’’ என ஆண்மை முழக்கம் செய்தார். ‘‘ஆங்கிலம் ஒன்றையே கற்று, அதற்கே ஆக்கையும் ஆவியும் விட்டு, தாங்களும் அயலவராகித் தமிழின் தொடர்பற்று’’ப் போன மக்கள் நோக்கி ‘‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’’ சேம முற வேண்டும் எனில் ‘தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ ‘ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்’ வாழன்மின் என ஓங்கி முழங்கினார். ‘‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’’ என்றும் ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’’ என்றும் பாடிப் புரட்சிக் கனலை மூட்டினார். நாட்டுப் பற்றையும் மொழிப்பற்றையும் நன்கு வலியுறுத்திய புரட்சிப் பாவலனை நாம் என்றும் போற்றிப் புகழ்வோமாக.
  பாவலர் பாரதியார், அவர் காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த சாதிக்கொடுமை, பெண்ணடிமை முதலியவற்றைக் கடிந்துரைத்தார்; ஆயினும் மக்கள் அவர் கூற்றைச் செவி மடுத்திருந்தினார்களிலர். ஏன்? பாரதியார் மக்களிடையே புலவராகவே அறிமுகமானார். அன்று புலவர்க்கு மக்களிடையே மதிப்பில்லை. ஆகவே பாரதியின் புரட்சிக் கருத்துக்கள் பாலை நிலத்தில் பெய்த மழைத்துளிகள் போலாயின. அவர் கூறிய புரட்சிக் கருத்துக்கள் மக்களிடையே செல்வாக்குப் பெற பெரியார் ஒருவர் வேண்டப்பட்டார்.

பெரியார்

அண்ணா

செந்தமிழ்ப் பாரதியும் சீர்சால் பெரியாரும்
நந்தமிழ் காக்கின்ற நல்லறிஞர் அண்ணாவும்
செய்த புரட்சிகளைச் சீர்த்தூக்கிப் போற்றுமின்
எய்துமின் இன்பமெலாம் இங்கு.
குறள்நெறி(மலர்1 இதழ்17):ஆவணி 31, 1995/ 15.09.1964
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/02/kuralneri02-250x75.jpg

http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/11/Perasiriyar_011.jpg

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்