செஞ்சீனா சென்றுவந்தேன் 14 –பொறி.க.அருணபாரதி
செஞ்சீனா சென்றுவந்தேன் 14 –பொறி.க.அருணபாரதி இலக்குவனார் திருவள்ளுவன் 28 செப்தம்பர் 2014 கருத்திற்காக.. (புரட்டாசி 5, 2045 / 21 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 14. போக்குவரத்துத் தீரச்யெல்கள் சீன வாடகைஊர்திகளைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நம்முடைய ஊரில் உள்ள அழைப்பூர்தி(கால் டாக்சி)களைப் போலவே அவை இயங்குகின்றன. எனினும், நடுவழியில் பலரையும் ஏற்றிச் சென்று இறக்குகின்றனர். சீன அரசு, மிதிவண்டிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதன்மைச் சாலைகளில் மிதிவண்டிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், அதற்குப் பதிவு செய்ய வேண்டும். பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவ்வாறு பதிவு செய்து மிதிவண்டிகளில் செல்கின்றனர். புவிவெப்பமயமாகிக் கொண்டுள்ள இக்காலகட்டத்தில், பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்து வளர்க்க வேண்டியது ஒவ்வோர் அரசின் கடமை. ஆனால், மகிழுந்துகள், இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வ...