எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! – ஆதிரை

எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! – ஆதிரை

  genocide139
முனகல்களோடு
புலர்ந்து கொண்டிருந்த
பொழுதை
மூர்ச்சையாக்கி
புதைத்த அந்த நாள்
பால் குடிப்பதற்காக,genocide134
சடலத்தின் உடலை உறிஞ்சிய
பச்சை மண்ணின் வறண்ட அதரங்கள்
கனவுகளைச் சுமந்த
பாவாடை மலர்களின்
நீலம் பாய்ந்த நயனங்கள்
வெட்டிய நெஞ்சின்
முட்டிய உறுதியின் அடையாளமாய்genocide121
கருகிய மீசைகள்
சுருங்கிய தோலும் சுருங்காத கனவும்
தேக்கிய  இதயங்கள்
எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்!
மரணம் அடுக்கி மாளிகை
கரசேவக இனவெறிப் பேய்கள்
குருட்டு மொழியின் கதறல்களுக்கு
இன்னும் வெளிச்சமிடாத
பச்சைத் துரோகங்கள்
மே 18genocide122
சிந்திய செந்துளிகள்
அமைதியடையும் நேரம் எது?
இனத் துரோகிகள் ஒழிவதெப்போது?
தனி ஈழம் மலர்வதெப்போது?
(மே 18 நிருவாணமாய் செவ்வாம் அடைந்த
எம் தொப்புள் கொடி உறவுகளின் நினைவாக….)
Banumathy Aathirai03eeahzam-blood01- ஆதிரை

 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்