பாலச்சந்திரன்01
கரைக்காயைப் போன்றிருக்கும் ஈழ நாட்டில்
கண்டைக்காய் என நினைத்துத் தமிழர் தம்மை  genocide130
வெறிநாயாய்க் கடித்திங்கே குதறி மாய்த்தான்!
வெந்தணலில் இராசபக்சே குளியல் போட்டான்!
அரக்கனந்தக் கொடியவனின் இலங்கை நாடா
அமைதிபுத்தன் அறத்தினையும் போற்றும் நாடு?
கரைமீதில் எழுந்தகடல் சுனாமி போல
கயவனவன் மனிதநேய மாண்ப ழித்தான்!
விண்மழையாய்க் குண்டுமழை கொத்துக் கொத்தாய்
விழுந்ததடா அப்பாவித் தமிழர் மேலே!
புண்மீது நெருப்பானான் இராச பக்சே!genocide129
புத்தனுக்கே களங்கத்தைச் சேர்த்த ‘கோட்சே’!
பெண்டிர்தம் கற்புமங்கே குரங்கின் கையில்
பிடிபட்ட மாலையாகிப் பிய்ந்த தாச்சே!
கண்விழித்துப் பூமி பார்த்த குழந்தை கூடக்
கண்மூடிக் கொண்டதடா கயவர் ஆட!
எரிகதிரோன் பிரபாக ரன்தன் மைந்தன்
இளங்குருத்து பாலச்சந்திரனைச் சுட்டான்!
இரக்கமின்றி இனப்படு கொலையைச் செய்த
இராசபக்சே நரிஓலம் சிலநாள் முன்னே!
பிரபாக ரன்வீரம் விளைந்த மண்ணே!eezham-genocide03
பேடியவன் இராசபக்சே வீழ்வான் பின்னே!
எரிதழலில் கைநுழைந்த மூடன் போல
இன்றுலகில் போர்க்குற்ற வாளி யானான்!
கோழையாகிப் போனதாமோ இந்தி யாவே?
கொடும்போரில் வங்கத்தை இந்தி ராவும்
பேழையிலே வைத்திங்கு காத்த வீரம்
பேருலகில் புதைந்ததெங்கே? தமிழர் வேறா?
ஈழ மண்ணில் தமிழ்க்குருதி நதிகள் ஓட
இந்தியாவில் அமைதிராகம் இருட்டில் பாட
வாழைமரம் காய்த்தது போல் தமிழர் சாய
வரலாற்றுப் பிழையாகிப் போன தம்மா!eezham-genocide04
இந்தியசா லியன்வாலா படுகொலையும்
ஈழத்து முள்ளிவாய்க்கால் படுகொலையும்
விந்தையிலும் விந்தையடா! வீணர் செய்த
வெறிச்செயலின் விளக்கமடா! மனித தருமச்eezham-genocide05
சிந்தனைகள் மாய்ந்தனவோ? ஐ.நா.மன்றம்
சிறுமதியான் தனைச்சிறைப் படுத்தச் சாய்வான்!
சிந்தியோடும் தமிழர்தம் குருதி ஆற்றில்
சிறகொடிந்த பறவையென வீழ்ந்து மாய்வான்!
என இனமோ ஈழத்தில் துடிக்கு தங்கே!
இருவிழியில் குருதிநீர் வடிக்கு தங்கே
என்மனமோ ஊமையென இருக்கு திங்கே!eezham-genocide07
என் உடலோ தணலாகக் கொதிக்கு திங்கே!
கண்ணிருந்தும் குருடனாக வாழ லாமோ?
காதிருந்தும் செவிடனாக இருக்கலாமோ?
விண்ணதிரத் தமிழீழம் முழங்கு வாய்நீ!
வெற்றி பெறப் பொங்கியெழு! பொங்கு வாய்நீ!
ltte-march01

LTTE-karupuli01