Skip to main content

மே 18 – கறுப்பு நாள் : கவிஞானி அ.மறைமலையான்

மே 18 – கறுப்பு நாள் : கவிஞானி அ.மறைமலையான்

eezham-genocide06
பண்டைத்தமிழ் மக்கள் மறு
பதிப்பெனவே மலர்ந்தோரே!
என்றும்தமிழ் மறம் ஓங்கும்
என்றே களம் கண்டோரே!
விழுந்த தமிழ் இனம் எழவே
வீரத்தீ விதைத்தோரே!
இழிந்தஈனச் சிங்களரின்
எதிர்ப்பையெலாம் மிதித்தோரே!
தனிநாடாம் தமிழ்ஈழம்
தனைநிறுவி வாழ்ந்தோரே!
புத்தமும் காந்தியமும்
கைகோத்ததால் வீழ்ந்தோரே!
புலித்தலைவர் ஆட்சிகண்ட
பொறாமைநரி இராசபக்சே
கொலைபுரிந்தான் தமிழ்இனத்தைக்eezham-genocide29
கொடிய நச்சுப்பாம்பெனவே!
இந்தியாஆள் காங்கிரசார்
ஈன்றகருவி உதவிகொண்டே
தந்திரமாய் இராசபக்சே
தமிழ்இனத்தைக் கொன்றானே!
இரண்டாயிரத் தொன்பதாண்டு
மே-பதினெட் டாம்நாளே
இருண்டதுவே தமிழ்ஈழம்
இருநூறாயிரவர் இறப்பாலே!
பதினெட்டு மேத்திங்கள்
கதியற்றார் நினைவுநாளன்று
சதிசெய்த காடையரின்eezham-with-prapakaran01
விதிமுடிக்கும் கறுப்புநாள்
முள்ளிவாய்க்கால் விடுதலைப்போர்
மூட்டும்தமிழ் மானத்தீ!
வெல்லவேண்டும் தமிழ்ஈழம்!
விளையவேண்டும் தமிழ்ஆட்சி!

- ரமுதல இதழ் 27: மே 18 துயரிதழ்
 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue