நாம் இரண்டல்ல ஒன்று – செந்தமிழினி பிரபாகரன்


நாம் இரண்டல்ல ஒன்று – செந்தமிழினி பிரபாகரன்

thamizhnaduandeezham03
நாம்
இரண்டல்ல
ஒன்றெனச் சொல்லுங்கள்.
கடற்கோள்கள் பிரித்த
தமிழாண்ட தேசங்கள்..
அடிமை தேசங்களாய்…
அவனியில் இன்று..
ஆயினும்
உணர்வழியா இனமாய்..
ஒன்றெனச் சொல்லுங்கள்.
உரத்துச் சொல்லுங்கள்..
எங்கள் இனம்
இன்று
ஒன்றானதென்று!
இல்லை என
பார்ப்பவர்கள்
பகைவர்கள்!
.
பிரித்துப்
பார்ப்பவர்கள்
பித்தர்கள்…!!
ஒன்றான மாந்தர்
ஒன்றுபட்ட இனம்..
ஒற்றை தாய் மொழி..
கடல் பிரித்த
தேசங்கள்..
இரண்டானாலும்
தமிழினம் என்றும்…
ஒரு குடி காண்!
ஒற்றுமை
ஒன்றே
உயர்வெனக் கொண்ட
வேற்றுமை இல்லா
தமிழர் நாம்!..
ஒன்றே எம் இலக்கு.
விடுதலை எம் கிழக்கு
உரத்துச் சொல்வோம்
உலகுக்கு!.
கோடி சோடி
விழிகளும்
காணும் காட்சி
ஒன்றெனச் சொல்!
துண்டாக்கும்
பகைகள்
எலும்புத் துண்டிற்காய்..
சில குறைகள்…
இனத்தை இரண்டாக்க
குரைக்கின்ற
இரண்டகர்கள்!
இழிந்த மொழியில்
இளித்துச் சொல்வார்..
நாம் இரண்டு என்றும்..
துண்டு துண்டானோம் என்றும்..
எச்சில் இலைக்காய்
பிச்சைக்காய்
பிதற்றல்கள்
தூக்கி எறிவோம்..
துட்டர் தமை..!
பிரிந்து நின்றோம்.
இழிந்து அழிந்தோம்..
இனியேனும்
மொழிந்திடுவோம்.
ஒற்றுமை
எம் வழி .
விடுதலை
எம் விழி என்று!thamizhnaduandeezham02
தமிழ் சாதி
சாதிக்குப் பிறந்தது அல்ல..
சாதிகளாய்ப்..பிரியவும் அல்ல
சாதிக்கப் பிறந்தோம்.!.
நீதிக்காய் வாழ்வோம்!
சரிவுகள்
போக்கி
நிமிர்வு கொள்வோம்!.
மாண்டு போகும்
தமிழெடுத்து
மீண்டும் மீண்டும்
சொல்லுங்கள்..
தமிழர் நாம்
என்றென்றும்..
ஒன்றென்றும்..
எம் தேசங்கள்
இரண்டென்றும்!!.
இனம் தின்ற பகையை .
வென்ற பின்னால்
வரலாறும் சொல்லும்..
“ஒன்றான தமிழர்
ஒன்று பட்டு
வென்றார்
தமிழர் விடுதலையை!”

senthamizhini-prapakaran03

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்