மாமூலனார் பாடல்கள் – 19 : சி.இலக்குவனார்
மாமூலனார் பாடல்கள் – 19 : சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் 25 மே 2014 கருத்திற்காக.. (சித்திரை 28, 2045 / 11 மே 2014 இதழின் தொடர்ச்சி) ககூ. “ நம்மிற்சிறந்தோர் இம்மை யுலகத்து இல் ” (பிரிவின்கண் வேறுபட்ட தலைவியும் தோழியும்) – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தலைவி: தோழி! அவர் அன்று கூறிய உரைகள் நினைவில் இருக்கின்றனவா? தோழி: ஆம் அம்ம! ஒரு தடவையல்ல; பல தடவை கூறியதாகக் கூறினீர்களே! அவ்வுரைகள்தாமே! தலைவி: ஆம், “நம்மின் சிறந்தோர் இம்மை உலகத்து இல்” என்பதுதான். தோழி: “நம்மைவிட அன்பில் சிறந்தவர்கள் இந்த உலகத்தில் இல்லை” என்று அவர் கூறியது உண்மைதான். அவர் உங்களிடத்திலும் நீங்கள் அவரிடத்திலும் கொண்ட அன்பு மிகவும் சிறந்தது அல்லவா? உங்களைப் போன்ற ஒத்த அன்புடையவர்களை இவ்வுலகத்தில் காணமுடியாதுதான். தலைவி: அவர் அன்புகனியக் கூறியதும், அன்பால் நெகிழ்ந்த உளத்தோடு, நம் நெற்றியில் பரந்தமயிரைத் தடவிக் கூட்டியதும் மறக்க முடியுமா? தோழி: அதுமட்டுமல்ல. அவர் இங்கு வருங்கா...