Posts

Showing posts from July, 2009

கலையற்ற உலகம், பண்பாடற்ற பாலைவனம் - முனைவர் வெ.இறையன்பு

Image
Image
இந்த வாரம் கலாரசிகன் First Published : 19 Jul 2009 01:42:25 AM IST Last Updated : திங்கள்கிழமை காலையில் ஓர் இன்ப அதிர்ச்சி . கைபேசி ஒலித்தது . எதிர்முனையில் முதல்வர் அலுவலகத்திலிருந்து பேசுவதாகச் சொன்னபோது , என்னை நானே கிள்ளிவிட்டுக் கொண்டேன் . முதல்வர் அலுவலகத்திலிருந்து எனக்குக் கைபேசி அழைப்பு வருவானேன் ? அழைத்தவர் தனது பெயர் பாலசுப்பிரமணியம் என்றும் , அவர் முதல்வரின் செயலரின் செயலர் என்றும் தெரிவித்தார் . முந்தைய நாள் " தமிழ்மணி ' பகுதியில் வந்த " இந்தவாரம் ' எழுதியவர் நான்தான் என்பதை உறுதி செய்துகொண்டபின் , அவர் விடுத்த வேண்டுகோளைக் கேட்டு நான் அதிர்ந்தேன் ."" கிரேக்கக் கவிஞர் டகீஸ் மென்டிரேகஸ் கவிதைகளை மொழிபெயர்த்துப் போட்டிருந்தீர்களே , அதைப் படித்த முதல்வர் , அந்த மொழிபெயர்ப்பு , புத்தகமாக வந்திருக்கிறதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார் . அப்படி இல்லையென்றால் , ஆங்கில மொழிபெயர்ப்பாவது கிடைக்குமா , அது எங்கே கிடைக்கும் என்கிற விவரங்களைத் தந்துதவுமாறு கேட்கச...
பொடிக்கவிகள் சி.சேதுபதி First Published : 19 Jul 2009 01:39:00 AM IST Last Updated : தமிழில் கொடிக்கவி உண்டு; சீட்டுக்கவியும் உண்டு; பொடிக்கவி என்று உண்டா? எனும் கேள்வி, தலைப்பைப் பார்த்தவுடன் எழுவது இயற்கைதான். உண்மையில் பொடிக்கவிகளும் தமிழில் இருக்கத்தான் செய்கின்றன.மனிதர்கள் வெவ்வேறுவிதமான பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள். அதிலும் கவிஞர்களுக்கென்றே சில நூதனப் பழக்கங்கள் இருப்பதுண்டு. அவற்றுள் மூக்குப்பொடி போடும் பழக்கம் ஒன்று. மூக்குப்பொடிப் போடும் பழந்தமிழ்க் கவிராயர்களுள் ஒருவர், பழனிப்பதியில் வசித்த மாம்பழக்கவிச்சிங்க நாவலர். கவி பாடுவதில் வல்லவர்.இவர், ராமநாதபுரம் சேது சமஸ்தானத்தில், மன்னர் பொன்னுசாமித்தேவர் முதலியோர் இருக்கும் அவையில், தமிழ் குறித்துப் பேசும்போது, எவரும் அறியாத வண்ணம், வெகு சாமர்த்தியமாய்ப் பொடி டப்பியில் இருந்து பொடியை எடுத்து உபயோகப்படுத்திக் கொள்வது வழக்கம்.ஒருநாள், அவரது பொடிடப்பியை, மன்னர் எடுத்து வைத்துக்கொள்ள, அறியாத புலவர் பொடிடப்பியைத் தேடத் தொடங்கினார். அதனைக் கண்ணுற்ற மன்னர், ""புலவரே பிரசங்கத்தின் இடையில், நீங்கள்...
Image
நல்வழி First Published : 19 Jul 2009 01:44:00 AM IST Last Updated : செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்எய்த வருமோ இருநிதியம் - வையத்துஅறும்பாவம் என்ன அறிந்தன்று இடார்க்கின்றுவெறும்பானை பொங்குமோ மேல். (பா-17)இவ்வுலகில் அறம் செய்வதால் பாவங்கள் நீங்கும் என்று உணர்ந்து, செல்வம் பெற்றிருந்த காலத்தில் வறியவர்களுக்கு உதவாதவர்களுக்கு, செல்வம் போய் வறுமையுற்ற காலத்தில், அடுப்பிலேற்றிய வெறும் பானை பொங்காதது போல, தாம் முன்னர் அறம் செய்யாத தீவினைப் பயனே காரணம் என்று வருந்த வேண்டுமே தவிர, தெய்வத்தை வெறுப்பதால் பெருஞ் செல்வம் வந்து சேராது.
Image
Image
Know the Etymology : 131 Place Name of the Day: Tuesday, 30 June 2009 Galle / Kaali காலி Gālla / Kāli Galle / Kaali The rocks The rocky place Kal also Kallu : Stone, rock (Tamil, Changkam Diction and modern. It is the same in all other Dravidian languages such as Kannada, Telugu, Malayalam, Tulu etc. Dravidian Etymological Dictionary 1298); Also means hill, hillock ( Changkam Diction, Pingkalam Lexicon); Comes as a place name suffix to mean a rocky place, found in the names of hills, hillocks and in the names of places that gained their names because of such hills, hillocks etc ( Changkam Tamil usage, also found in Malayalam, Kannada Telugu and Tulu place names); Gal (plural), Gala (singular): Stone, rock (Sinhala); Gala is found as a suffix in the place names of rocky places, hills, hillocks etc similar to the usage of Kal / Kallu in Dravidian languages (Sinhala, see column on Bambaragala ) Location of Galle / Kaali [Satellte image courtesy: Google Earth] Ga...
Image
பிறந்த நாளல்ல, மறுபிறவி! இடைமருதூர் கி.மஞ்சுளா First Published : 13 Jun 2009 01:51:58 AM IST Last Updated : இதோ இன்னொரு விடியல், இன்னொரு காலைப்பொழுது, என் வாழ்க்கையின் குத்தகை மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இஹழ்ல்ங்க்ண்ங்ம் என்பார்கள் லத்தீன் மொழியில். இதன் பொருளாவது, இன்றைய தினத்தைக் கெட்டியாக (உடும்புப் பிடியாக) பிடித்துக்கொள் என்பதாகும். ""உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு'' என்றார் வள்ளுவர். அப்படித்தான் அனைவரும் ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறக்கிறோம். இதில் வருடம் ஒருமுறை பிறந்தநாள் கொண்டாட என்ன இருக்கிறது? இன்னும் அடுத்த சில நிமிடங்களில் நம் வாழ்க்கையில் என்ன நிகழப்போகிறது என்பதைக் கூட நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாத நிலை. ""என் ஆயுள் காலம் எவ்வளவு எஞ்சியுள்ளது எனத் தெரியாத நிலையில் இன்று நான் உயிருடன் இருப்பதே மாபெரும் பரிசு. பணமோ, புகழோ வேண்டாம். இவை எல்லாமும் மற்றும் எதுவுமே உயிர்க்கு சமமில்லை'' என்கிறார் வள்ளலார் பெருமான். இதையெல்லாம் ஏன் இங்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்வ...
மதிசூழ் மீனும் கண்ணுமிழ் கழுகும் மா.ஆறுமுக கண்ணன் First Published : 12 Jul 2009 01:16:00 AM IST Last Updated : அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது தாய்ப்பாசம். மனித குலத்திலாவது தாய், தான் பெற்றெடுத்த பிள்ளைகள் தன்னைப் பிற்காலத்தில் காப்பாற்றுவர் எனக் கருதி கூடுதல் அக்கறையுடன் வளர்ப்பதாகக் கொள்ளலாம். ஆனால், ஐந்தறிவு கொண்ட விலங்குகள், பறவை இனங்களில் அந்த எதிர்பார்ப்பே இல்லை. எனவே, அவையிடத்தில்தான் தாய்ப்பாசம் முழுக்க முழுக்க பிரதிபலன் பாராதது என உறுதியாய்ச் சொல்லலாம். கண்ணில் விழுந்த காட்சியை, தான் மட்டும் நினைத்து மகிழாமல் நிலையான கலை மூலம் அதை நிலைபெறச் செய்வோரே கலைஞர்கள். ஒரு வினாடியைத் தன்னுள் பதுக்கிவைத்து, பார்க்கும் நேரமெல்லாம் காண்போரின் நெஞ்சுக்குள் நினைவலைகளை நிரப்புவன புகைப்படங்கள். கவிதை, ஓவியங்கள் போன்ற கலைகளும் அவ்வாறே! படிக்கும்தோறும், பார்க்கும்தோறும் பரவசப்படுத்துவன. அவ்வாறு படிக்கும் போதெல்லாம் பரவசத்தில் ஆழ்த்தும் வகையிலான, புலவரின் கண்பட்ட பொன்னான காட்சிகள் பல "நெடுந்தொகை' எனப்படும் "அகநானூறு' முழுவதும் அழகு செய்கின்றன...
Image
பொருட்குற்றம் தவிர்ப்போம் கா.மு.சிதம்பரம் First Published : 12 Jul 2009 01:27:00 AM IST Last Updated : அருந்தமிழில் உள்ள சொற்கள் அனைத்தும் ஆழமான பொருள் உடையவை. அத்தகைய சொற்களுள் ஒன்று "அல்குல்' என்பது. இச்சொல் பெண்ணின் உறுப்புகளுள் ஒன்றைக் குறிக்கிறது. ஐந்து தமிழ் அகரமுதலிகளில் அல்குல் என்னும் சொல்லுக்கு "பெண்குறி' என்று பொருள் தரப்பட்டுள்ளன. இப்பொருள் மிகவும் தவறானது.உரைவேந்தர் ஒüவை.சு.துரைசாமிப்பிள்ளை, புறநானூறு 344-ஆம் பாடலுக்கு எழுதியுள்ள உரையில், ""அல்குல் என்பது இடைக்கும் முழந்தாளுக்கும் இடைப்பகுதி ஆகும்'' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள "சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம்' என்னும் நூலிலும் இச்சொல்லுக்கு "இடுப்பு உறுப்பு' என்றே பொருள் கூறப்பட்டுள்ளது.உலகுக்கே அன்னையாக விளங்கும் உமையம்மையைப் பற்றிக் கூறும்போது, மாணிக்கவாசகர், "பைந்நாகப் படவேரல்குல் உமை' என்றும், சுந்தரர், "இழைநுழை துகில் அல்குல் ஏந்திழை' என்றும் திருநாவுக்கரசர், "துடியிடை பரவை அல்கு...
இந்த வாரம் கலாரசிகன் First Published : 12 Jul 2009 01:38:00 AM IST Last Updated : சமீபத்தில் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு போயிருந்தபோது, ஜவகர் கல்லூரி முதல்வரும், தமிழ்ப் பேராசிரியருமான மருதூர் அரங்கராசன், தான் எழுதிய "யாப்பறிந்து பாப்புனைய..' என்னும் நூலை அன்புப் பரிசாகத் தந்துதவினார். நல்ல தமிழ் எழுத எளியதொரு படைப்பை ஏற்கெனவே நல்கித் தமிழ்த் தொண்டாற்றியிருக்கும் மருதூராரின் இன்னுமொரு படைப்பு இந்த "யாப்பறிந்து பாப்புனைய' என்னும் நூல்."யாப்பு' அறிந்து மரபுக் கவிதை இயற்ற விரும்புவோருக்கும், "யாப்பு' அறிந்தபின் புதுக்கவிதை புனைய விரும்புவோருக்கும் இந்நூல் கிடைத்தற்கரிய கையேடு. நம்பகமான வழித் துணை.இந்த அற்புதமான நூலுக்கு காலம் சென்ற பேராசிரியர் தி.வே.கோபாலய்யர் ஓர் ஆய்வுரை எழுதியிருக்கிறார். அதைப் படித்ததும் வியப்பில் ஆழ்ந்துவிட்டேன். அச்சில் சுமார் மூன்று பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வுரையின் தனித்துவம் என்ன தெரியுமா? அது ஒரே ஒரு வாக்கியத்தால் ஆனது என்பதுதான். ஒரு இடத்திலாவது இடிக்கவேண்டுமே. அவரது தமிழ் ஆளுமை எத்தகையது என்பதை...