Skip to main content

உ. உயர்தனிச் செம்மொழி-புலவர் வி.பொ.பழனிவேலனார்

 

உ. உயர்தனிச் செம்மொழி-புலவர் வி.பொ.பழனிவேலனார்



(தமிழ்: க. தமிழ் வளர்ப்போம்-வி.பொ.பழனிவேலனார்- தொடர்ச்சி)

ஒருவர் (எவர் பெயரையும் குறிப்பிட விரும்புகிலேம்)  தமிழில் பேச்சுமொழியை ஒழுங்குபடுத்திச் செப்பம் செய்யவேண்டும் என்கின்றார்;  வேறொருவர்பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தாம் தமிழ் வளர்ச்சியடையும்  என்கின்றார்;  இன்னொருவர்அறிவியல் கருத்துகளைத் தமிழில் எழுதபேசப் பிறமொழிச் சொற்களை அவ்வாறே எடுத்தாள வேண்டும்.  அன்றுதான் அறிவியல்தமிழ் வளரும் என்று சொல்கின்றார்ஆங்கில மொழியைப் பின்பற்றி எழுத வேண்டும் என்கின்றார் மற்றொருவர்; ‘தமிழ்க் கழகங்கள் முத்தமிழ் வளர்த்தன என்பதெல்லாம் கட்டுக்கதை;  தமிழ்ச்சங்கள் இருந்தனவென்பதற்குச் சான்றில்லை;  திருவள்ளுவர் ஆண்டு கி.மு.31 என்பது தவறு;  கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்’ என்று ஆங்கிலத்திலும்தமிழிலும் புத்தகம்  எழுதியுள்ளதாக அறிவிப்பு அச்சிட்டு வழங்கியுள்ளார். மேலும்ஒருவர் தமிழ் நெடுங்கணக்கில்  எழுத்துகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று அறைகின்றார்.

ஆகவேஒவ்வொருவரும் தம்தம் மனம் போகும் போக்கில் அறிவுரையும்ஆய்வுரையும் புகலுகின்றனரேயன்றிநடுநின்று ஆக்கப்பாட்டு நெறியில்தமிழ் வளர்ச்சிக்குரிய வகையில் உருப்படியான கருத்துகளை நவின்றிலர்.  கரணியம் என்னவெனில்அவர்கள் தமிழ் மொழியின் தனியியல்புகளை அறியாமையும்மொழியியல்  ஆய்வு இன்மையுமேயாகும்.

தமிழ் மொழியில்ஏனைய மொழிகளைப் போன்று பேச்சுமொழிக்கும்எழுத்து மொழிக்கும் வேறுபாடில்லை.  எழுதுவது  போன்று பேசக்கூடிய  மொழி தமிழ் மொழி மட்டுமே!  எழுத்து மொழியைப் போல் பேசாமல் இருப்பதும்,  தமிழ் மொழியைப்   பொருளற்றதாக ஆக்கிவிடும்.

           பெண்ணைப் பொண்ணு என்பதும்,

           பிள்ளையைப் புள்ள என்பதும்,

           போயிற்று என்பதைப் போச்சு என்பதும்,

           ஆயிற்று என்பதை ஆச்சு என்பதும் 

  இத்தகையன.

பெண் என்பது பௌ என்னும் வேர்ச்சொல் அடியாகப் பிறந்தது.

பௌ என்றால்  விரும்புஆசைப்படு என்பன பொருள்.

பொண் என்பது பொள் என்னும் வேர்ச்சொல் அடியாகப் பிறந்தது.

பொள் என்பது துளையிடுவெட்டு என்பன அதன் பொருள்

புள்ள என்பதும் அதுபோன்றதே!

புள் +அ ஸ்ரீ  புள்ள

புள் என்றால் பறவைவண்டு என்பன பொருள்.

பிள்ளை என்பது சில இடங்களில் ஆண்பிள்ளை என்றும்சில இடங்களில் பெண்பிள்ளை என்றும் வழங்குவர்.  இவ்வாறு மக்களின் பேச்சுவழக்கில் உள்ள அனைத்துச் சொற்களையும்சொற்பிறப்பியல் ஆய்வு செய்தால்எழுத்துவழக்கிற்கும்பேச்சு வழக்கிற்கும் உள்ள  பொருள்  வேறுபாடு  புலனாகும்.

படித்தவர்கள் சரியாகப் பலுக்கினால்படிக்காதவர்களும் அவ்வாறே பின்பற்றுவர். அப்பொழுது பேச்சுமொழிஎழுத்துமொழி இரண்டிற்கும் வேறுபாடு இன்றிஇரண்டும் ஒன்றாகிவிடும்.

பெரிய படிப்பாளிகள் என்று சொல்லப்படுகின்ற  தமிழ் மொழியாய்வு செய்து பண்டாரகர் (னுழஉவழசயவந) பட்டங்கள் பெற்றவர்கள் கூட இன்று இப்படித்தான் பேசுகின்றனர். தொடக்கப் பள்ளிகளில்  கற்பிக்கும் ஆசிரியர்கள் முறைப்படி கற்பித்தால் இந்நிலை மாறும்விளையும் பொழுதிலே ஏற்படும் மாற்றம் என்றும் மாறாது;  மறையாது.  அங்ஙனம் செய்வதை விட்டுவிட்டு வேலியே பயிரை மேய்ந்தால் தமிழ்மொழிப்பயிர் எப்படி வளரும்எங்ஙனம் வாழும்?

உலக மொழிகள் அனைத்திலும் தனித்தியங்கும் தனிவியல்பு உடையது தமிழ்மொழி ஒன்றே!  அதனாற்றான் தமிழ் உயர்தனிச் செம்மொழி என்னும் பெரும்பேற்றிற்குரியது.

                           (நன்றி : குறளியம்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்