௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் ?-புலவர் வி.பொ.பழனிவேலனார்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 28 December 2024 அகரமுதல (உ,உயர்தனிச் செம்மொழி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் ? முன்னுரை உலக மொழிகளுள் முதன்மையானதும் , பண்பட்டதும் தமிழ்மொழி ஒன்றே. எழுத்துகள் செப்பமாயமைந்தது ; மென்மை , வன்மை , இடைமை ஒலிகளையுடைய எளிய இனிய மொழி ; ஒரு சொற்கு ஒரு பலுக்கல் உடையது ; ஒரு சொல்லில் உள்ள எல்லா எழுத்துகளும் , ஒலிக்கும் இயல்புடையது. எழுத்து மாற்றம் வீரமாமுனிவரால் செய்யப் பெற்றபின் , பெரியார் வழி பற்றி , தற்போது தமிழக அரசு ஓரளவு எழுத்துச் சீர்திருத்தம் செய்துளது. இதற்குமேல் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்றாலும் தற்காலத் தேவை கருதி நிலையான சீர்திருத்தம் வேண்டற்பாலதே. பிறர் கருத்து எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பலரும் பலவகையான திருத்தங்களைத் தந்தம் மனத்தில் தோன்றியவாறு தெரிவித்துள்ளனர். அவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து இனி என்றுமே மாற்றம் வேண்டாத வகையில் செய்யப்பெறல் இன்ற...