Posts

Showing posts from March, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 50 : கலைமகள் திருக்கோயில்

Image
  ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         31 March 2024        அகரமுதல (உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அபய வார்த்தை – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 49 கலைமகள் திருக்கோயில் மாயூரத்தில் வசந்தோற்சவம் ஆன பிறகு  சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறைக்குப் பரிவாரங்களுடன் திரும்பி வந்தனர். அவருடன் பிள்ளையவர்களும் நாங்களும் திருவாவடுதுறை வந்து சேர்ந்தோம். வழக்கப்படி மடத்திலே பாடங்கள் நடைபெற்று வந்தன. தேசிகரின் பொழுது போக்கு சுப்பிரமணிய தேசிகர் காலை எழுந்தது முதல் இரவில் துயிலச் செல்லும் வரையிற் பாடம் சொல்வது, வித்துவான்களோடு சம்பாசணை செய்வது, மடத்திற்கு வருபவர்களுடைய குறைகளை விசாரித்து வேண்டிய உதவிகளைச் செய்வது ஆகிய விசயங்களிலே பெரும்பாலும் பொழுதைப் போக்கி வந்தார். நீராடல் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அவர் எழுந்துவிடுவார். சில சமயங்களில் ஒரு முதிய தம்பிரான் வந்து அவரை எழுப்புவார். எழுந்தவுடன் ஐந்து மணியளவுக்குக் காவிரிக்கு நீராடச் செல்வார். மடத்திலிருந்து காவிரித்துறை அரை கல் தூரம் இருக்கும். நடந்தே செல்வார். ஆசனப் ...

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 9 : ஓரியின் புகழ்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         30 March 2024        அகரமுதல (இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 8 : தமிழ்நாட்டுக் கோட்டைகள் – தொடர்ச்சி) தமிழர் வீரம் ஓரியின் புகழ் படைத்திறமும் கொடைத்திறமும் வாய்ந்த வல்வில் ஓரியைப் பாராட்டிப் பாடினார், வன்பரணர் . அவரது பாட்டின் சுவையறிந்து மகிழ்ந்தது பழந்தமிழ் உலகம்.  செஞ்சிக் கோட்டை திண்டிவனத்திற்கு மேற்கே  உள்ளது செஞ்சிக் கோட்டை. அஃது இயற்கையான மலைக்கோட்டை. ஒன்றோடு ஒன்று இணைந்த மூன்று குன்றுகளால் அரண் செய்யப்பட்டுள்ள அக்கோட்டையின் சுற்றளவு ஏழு கல் என்பர். அவற்றுள் உயர்ந்தது  இராசகிரி  யென்னும் கொடுமுடி. செங்குத்தாக அறுநூறடி எழுந்து அண்ணாந்து நிற்பது அக்குன்றம். அங்குள்ள கோட்டைக்கு வாயில் ஒன்றே; மலையடிவாரத்திலிருந்து பெரும் பாறைகளின் இடையே நெளிந்து வளைந்து செல்லும் நடைபாதை அவ்வாயிலுக்கு எதிரேயுள்ள ஒரு பறம்பின் உச்சியிற் கொண்டு சேர்க்கும். அதற்கும் கோட்டை வாயிலுக்கும் இடையே அறுபதடி ஆழமும், இருபத்தைந்தடி அகலமும் உள்ள  விடர் ஒன்று உள்ளது. அவ...

வள்ளுவர் சொல்லமுதம் 13 : அ. க. நவநீத கிருட்டிணன் : கூ. அறிவும் ஒமுக்கமும்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         29 March 2024        அகரமுதல ( வள்ளுவர் சொல்லமுதம் 12 : அ. க. நவநீத கிருட்டிணன் : கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி- தொடர்ச்சி ) வள்ளுவர் சொல்லமுதம் அறிவும் ஒமுக்கமும் கற்றும் கேட்டும் தெளிந்தும் பழகியும் பெற்ற அறிவே நிறைந்த அறிவாகும். “ கல்வியின் பயன் அறிவு ” என்று கற்றறிந்தோர் கூறுவர். தெய்வப் புலவராய திருவள்ளுவர் அறிவின் இலக்கணத்தைத் திறம்பட இயம்பியுள்ளார். கல்வி கேள்விகளின் நிறைவே அறிவு பெறுதற்கு உறுதுணை என்பதை அறிவுறுத்தக் கல்வி கேள்விப் பகுதிகளை அடுத்து அறிவுடைமை என்னும் அதிகாரத்தை அமைத் துள்ளார்.  நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தலே அறிவாகும்  என்று இலக்கண உரையாசிரியர்கள் விளக்குவர். இதனையே நம் தெய்வப்புலவர், “ சென்ற இடத்தால் செலவிடா திதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு ” என்று கூறியருளினர். குதிரையை நிலம் அறிந்து செலுத்தும் வாதுவன் போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்று பரிமேலழகர் உரைவிளக்கம் தந்தார். எந்தப் பொருளை எவர், எவர் இயம்ப...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 42 : தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         27 March 2024        அகரமுதல (கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 41 : 8. கடல்நகரில் தங்கிய காதை-தொடர்ச்சி) பூங்கொடி தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல் ஆண்டு நிகழ்ந்த அத்துணைச் செய்தியும் மூண்டெழும் உணர்ச்சி முந்துற மொழிந்து'இனும் 25 புகலுவென் கேட்டி! பூங்கொடி ஆற்றிய தகவுரை கேட்டோர் அகமிக வுருகி இன்னுஞ் சின்னாள் இருந்திடல் வேண்டும் என்ன நயந்தனர்; எழிற்பூங் கொடியும் ஆண்டுளார் பண்பொடு அவர்தம் அரசியல் 30 காண்டகு நெஞ்சினள் கனிவோ டிசைந்தனள்; சின்னாள் இருந்து செந்தமிழ் பரப்பிப் பின்னர் மீளுவள் பேதுறல் தவிர்நீ’ இன்னணம் தாமரைக் கண்ணி இசைத்தலும் அருண்மொழி மனநிலை அல்லி வருந்தி அருண்மொழி தன்பாற் 35 புல்லி, அனைத்தும் புகன்றது கேட்டவள் கலங்கினள் ஆயினும் `கன்னித் தமிழின் விலங்குபடை படஅவ் வீரங் காட்டினள்; வாழ்கஎன் மகளே! வாழ்கஎன் மகளே! வாழ்கஎன் தமிழே! வாழ்கஎன் தமிழே!’ 40 எனுமுரை கூறி இறுமாந் திருந்தனள் மனமொழி செயலெலாம் மாசறத் திகழ்ந்தவள்; பூங்கொடி கலக்கம் கல்ல்லென் பேரூர் கடல்நகர் ஆங்கண் புல்...

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 8 : தமிழ்நாட்டுக் கோட்டைகள்

Image
  ஃஃஃ         இலக்குவனார் திருவள்ளுவன்         23 March 2024        அகரமுதல ( இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 7 : கடலாண்ட காவலர்-தொடர்ச்சி ) தமிழர் வீரம் 8 தமிழ்நாட்டுக் கோட்டைகள் அரண்மனை நாட்டைக் காப்பவன் அரசன்; அவனைக் காப்பது அரண்மனை. அரசன் வாழும் இடம் அரண்மனை எனப்படும். அரண் என்பது கோட்டை. எனவே, அரணுடைய மனையே அரண்மனையாகும். தமிழகத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்தது  மதுரை மாநகரம். நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலமாகப் பாண்டியர் அத்தலைநகரில் அரசு வீற்றிருந்தனர் . அங்கு அமைந்திருந்த ஓர் அரண்மனையின் சிறப்பினைச்  சிலப்பதிகாரம்  எடுத்துரைக்கின்றது. 1  மாளிகையைச் சூழ்ந்து நின்றது நெடுமதில்.  பலவகைப் பொறிகள் அம் மதிலில் அமைக்கப்பட்டிருந்தன.  மாற்றாரை மறித்துத் தள்ளும் இருப்புக் கவை; தானே வளைந்து சரமாரி பொழியும் யந்திர வில்; உருக்கிய செம்பையும் இரும்பையும் மாற்றார் மீது வார்க்கும் உலைப்பொறி; பற்றிய பகைவர் கரங்களைப் பொதிர்க்கும் ஊசிப்பொறி; கழுத்தை முறுக்கும் இரும்புத் தொடர்; இ...