Skip to main content

கரையானின் புற்றிற்குள் கருநாகப் படையெடுப்பா ! ? – புலவர் பழ.தமிழாளன்

 அகரமுதல




கரையானின்   புற்றிற்குள்     கருநாகப்  படையெடுப்பா ! ?

இறையுறையும்  கோவில்கட்ட   இயன்ற

      வரை  பொருளீந்தோர்  தமிழ   ரன்றோ ?

    எழிலார்க்கும் கோபுரமும் இறையமரும்

          கருவறையும்  புறமும் உள்ளும்

முறையாகப்  பணிபுரிந்தோர் முத்தமிழ்த்

      தாய் ஈன்றெடுத்த  சேய்க ளன்றோ ?

  முடிவுற்ற கோயிலினுள் முத்தாய்ப்பாய்

         எப்பணியும்  செய்யா  நின்ற

கறையுள்ளத் தீச்சிதர்கள்  உட்புகுந்தே

      தில்லையிலே  போடும்  கொட்டம்

   காணக்கண் கூசுகின்ற காட்சியதைக்

         காணுங்கால்   கரையான்   தன்வாய் //

உறைவதற்கே  உழைத்தெடுத்த  புற்றி

         னுள்ளே  கருநாகம்  உட்பு  குந்தே /

   ஒய்யார  மாகவுமே  உறைந்தாடும்

         காட்சியதாய்  ஒப்பும் ! ஒப்பும் ! //

                 புலவர் பழ.தமிழாளன்,

          இயக்குநர்–பைந்தமிழியக்கம்,

                    திருச்சிராப்பள்ளி.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்