திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 4/4 – வெ.அரங்கராசன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 01 July 2022 No Comment (திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 3/4 தொடர்ச்சி ) முனைவர் கு . மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 4/4 1 3.0.0.0. நலம் நடைநலம்: ஒரு நூலை / ஆய்வு நூலை மிகக் கடினப்பட்டு, நூலாசிரியர் நெய்கிறார். அந்நூல் ஆய்ஞர், அறிஞர், கற்றார், கல்லார், சுவைஞர் என அனைவரிடமும் சென்று அகத்துள் பதிய வேண்டும். அவ்வாறு செலச்செல்வதற்கு நூலின் நடை நலம் மிக இன்றியமையாதது. அப்போதுதான், நூலாசிரியரின் ஆய்வுக்கும் அரிய உழைப்புக்கும் ஆன்ற பயன் ஊன்று நிலை தோன்றும். இதன் நடை எல்லோருக்கும் புரியும்படியான எண்பொருளவாகச் செலச்சொல்லும் தண்தமிழ் நடை. கடினமான நூற்பாக்களை எளிமையாக நுவலும் ஏற்புடைய நடை. தெளிவு மிக்க தீந்தமிழ்த் தனிநடை, பொலிவு மலிந்த நடை; போற்றலுக்கு உரிய பொற்றமிழ் நடை. 13.1.0.0. அகச்சான்றுகள் — 8 மட்டும்: அறம், பொருள், இன்பம் எ...