மணம் ஆகாமலே மணவிலக்கு! – ஆற்காடு.க.குமரன்
அகரமுதல



மணம் ஆகாமலே மணவிலக்கு!
நினைவுகளைக்
காவலுக்கு
வைத்துவிட்டு
நீயெங்கு சென்றாயடி…….?
நிழலாய்த்
தொடரும் உன் நினைவுகளால்
உழலுகிறேன்
நீங்காது…..
காவல் காக்கும்
உன் நினைவுகள்
கல்லறை வரை
காத்திருக்கின்றன
மீட்க வரவில்லை
மீளாத்துயரில்
ஆழ்கின்றன!
நினைவுகளை
அடைமானம் வைத்து விட்டு
வெகுமானம் தேடி நீ சென்றது
காதலுக்கு அவமானம!
நினைவுப் பிள்ளையோடு
கைம்பெண்ணாய்
காத்திருக்கிறேன்
மணம் ஆகாமலே
மணவிலக்கு பெற்ற
நீ விரும்பிய காதலன்!.
இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114

Comments
Post a Comment