Skip to main content

கனலே சொரியும் கவியே! – அரிஅரவேலன் யரலவழள

அகரமுதல


கனலே சொரியும் கவியே! 

பாவேந்தர் மெய்ப்புகழ்

வண்ணம்
தனனே தனன தனனே தனன
தனனே தனன தனனே தனன
தனனே தனன தனனே தனன தனதனனே

அனலே பொழியும் மொழியே இதழில்
உளதோ எனயெம் உளமே வியக்க
வளமே விளையும் ஒலியே உறையும் உளந்தனிலே
இனமே உயர எழிலே உலவ
கனலே சொரியும் கவியே தமிழில்
தினமே புனையும் திருவே எந்தம் கனகசுப்பே
புயலே எழில்மிகு  வடிவே எடுத்தெம்
புயமே துடிக்கும் படிநீ வடித்த
கவியே தமிழின் முடியே எனயாம் திளைத்தனமே
வளமே தமிழர் நலமே வியையுன்
கவியே சுவைநிறை மதுவோ? தமிழர்
மறமோ? குளிரும் புனலோ? எது
வென் றறிந்திலமே!
அரிஅரவேலன் யரலவழள
(பாவேந்தர் நூற்றாண்டில் எழுதிய செய்யுள்)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue