இந்துக்களே காரணம்! – ஆற்காடு.க.குமரன்
அகரமுதல
இந்துக்களே காரணம்!
திருச்சோற்றக்காகத்
திருவறையைச்
சுற்றுவது
கழுவாய் தேடி
திருவறையைச்
சுற்றுவது
இந்து மதம் அழிய
இந்துக்களே காரணம்!
இந்துக்குள்ளும்
பிரிவினை
சைவம் வைணவம்…..
அதிலும் பிரிவினை
சாதி……
இந்துக்களை
இந்துக்களே
கீழ்ச் சாதிக்காரன் என
இழிவாய் எண்ணி
இறைவன் திருக்கோவில்
நுழையத் தடை செய்தது
முதல் குற்றம்.
தூணிலுமிருப்பான்
துரும்பிலுமிருப்பான்
ஆனால்
தூங்கிக்கொண்டிருப்பான்,
ஏங்கித் தவிக்கும்
ஏழையை மறந்து!
சிவனுக்குக்
கண் கொடுத்த
கண்ணப்பர்
எந்தச் சாதி…….?
சத்தியம் இருந்தபோது
எல்லாம் சாத்தியமானது….
சத்தியம்
பத்தியம்
சகலரும் பைத்தியம்…
பிரிவினையைப் பிரித்தெறி!
கடவுள் காட்சி பொருளான போதே
மதமும் சாட்சிப் பொருளானது
இந்துக்களால் விலக்கி வைக்கப்பட்ட
இந்துக்களை விரும்பி அழைத்தது
அரும்பித் தழைத்தது
கிறித்துவ மதம்!
போக்கிடம் இன்றித் திரிந்தவனுக்கு
போதனை செய்தது!
குற்றம் நம் மீது
குற்றவாளி நாமே!
இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114
Comments
Post a Comment