புதை நூல் – தமிழரசி இளங்கோவன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 28 April 2020 No Comment புதை நூல் “மங்களத்து நாயகனே, மண்ணாளும்..”, என்ற அம்மாவின் பக்திக் குரல் தூபம் காட்டியவாறே வீட்டை வலம் வந்தது. வீடே புகை சூழ இருந்தது. ‘டப்,டப்,டப்..’, என்று கோழித் தீனியைக் கொத்துவது போல் கமலாவின் அறையிலிருந்து ஒலி எழும்ப, அம்மா, கமலா அறையின் கதவைத் திறந்து தூபம் காட்டும் பெயரில் அறையையும் விட்டு வைக்காமல் ஒரு வலம் வந்தார். கண்கள் கமலாவின் கணினியை வலம் வந்தது. செய்தி கமலா அப்பாவின் காதுக்கு எட்ட, “கமலா, கமலா!”, என்று அழைத்தார். தோழியோடு முகநூலில் அளவளாளவுவதாக இருந்த கமலா அப்பாவின் குரல் கேட்டு வெளியேறும்போது ‘சதக்’ என்று தனது காலின் சுண்டுவிரலை இடித்துக் கொண்டாள். வலியோடு வரவேற்பறையின் வழிக்கு வந்து நின்றாள், “சொல்லுங்க, அப்பா”, என்று கூறியவாறே! “உட்காருமா’, என்று அப்பா கூற, “பரவாயில்லை அப்பா. சொல்லுங்கள் அப்...