Posts

Showing posts from August, 2016

தமிழ் வாழ்த்து- முடியரசன்

Image
அகரமுதல 149, ஆவணி 12 , 2047 / ஆக. 28 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன்      28 ஆகத்து 2016       கருத்திற்காக.. தமிழ் வாழ்த்து வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக் கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ் நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே – முடியரசன் (கவிஞர் இறுதியாக இயற்றிய கவிதை) பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) பக்கம் 20

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! – தி.வே.விசயலட்சுமி

Image
அகரமுதல 149, ஆவணி 12 , 2047 / ஆக. 28 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன்      28 ஆகத்து 2016       கருத்திற்காக.. பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி ! பொய்தீர் ஒழுக்க நெறிபுகன்ற வள்ளுவனார் செய்தார் குறள்நூல் செறிந்து. குற்றமிலா வாழ்நெறியைக் கூறும் குறள்நூலைப் பற்றியே வாழ்வோம் பணிந்து. எம்மொழிக்கும் இல்லாத ஏற்றமிகு இன்குறளால் செம்மொழிக்குச் சேரும் சிறப்பு. வேதத்தின் வித்தாய் விளங்கும் குறளமுதின் நீதியை நெஞ்சே நினை. வள்ளுவர் உண்மையை விள்ளுவர் பொய்ம்மையைத் தள்ளுவர் சீர்அள் ளுவர். -புலவர் தி.வே.விசயலட்சுமி

குவிக்க வேண்டும் தமிழ்ச்செல்வம்! – தாமோதரன் கபாலி

Image
அகரமுதல 149, ஆவணி 12 , 2047 / ஆக. 28 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன்      28 ஆகத்து 2016       கருத்திற்காக.. குவிக்க வேண்டும் தமிழ்ச்செல்வம்! தமிழில் பேசு கலப்பின்றித் தவமாய்க் கொண்டு பழகிடவே சிமிழில் ஒளிரும் முத்தாகும் சிந்தை மகிழும் ஒளிக்காணும் குமிழைப் போன்ற வாழ்வினிலே குவிக்க வேண்டும் தமிழ்ச்செல்வம் அமிழ்தாய் மாறி உயிரினிலே அடங்கும் பொலிவைக் காண்போமே! தாமோதரன் கபாலி