Skip to main content

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 24 – ஆ.வெ.முல்லை நிலவழகன்


sparrowa79

காட்சி – 24

அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில்
இடம்      :     அருண்மொழி இல்லம்
நிலைமை  :     (ஒப்பனைக்காக அருண்மொழி, அனைத்தும்
தப்பாது வாங்கி இல்லம் வருதல்)
அரு   :   கொடியே! நீ! வருக!
கோவில் நாம் செல்வோம்
நொடியும் இனி இல்லை
புரிவாய்! நீ கண்ணே!
பூங்   :    வாடா மலர்ப் பட்டோ!
காஞ்சி செம்பட்டோ!
தேடி நான் கட்டி
வருகிறேன் அத்தான்!
அரு   :   வீடே ஒரு கடையாய்
இருந்ததும் நீ! என்ன!
தேடி நீ கட்டி
வருகிறேன்! என்றாய்!
பூங்   :    இருந்தென்ன பண்ண?
இருக்கும் பட்டெல்லாம்
இரு மூன்று மாத
பழசல்லோ அத்தான்
அரு   :   முன்பே நீ! சொல்லக்
கூடாதா கண்ணே!
என்ன! இப்போதும்
கேடில்லை உடன் நீ
வேண்டுவதெல்லாம்
விள்ளவே வேண்டும்
தூண்டி நீ பின்பு
சொல்லுதல் வேண்டாம்.
பூங்  :     கச்சோட்டுப்பட்டுப்
பாவாடை ஒன்றும்
பச்சை நிறப் பொட்டு
சிமிழ் நீ! ஒன்றும்
உடனே சொல்ல
மறந்தேனே! அத்தான்
அடுக்குமல்லிகை
சடைப்பூவொன்றும்
நேரமோ ஆனால்
விடுதிக்கும் செல்வோம்!
யாரேனும் உடன் நீ!
அனுப்புக! அத்தான்!
அரு  :     அனைத்தும் நான் செய்வேன்!
ஆனாலும் நீயோ!
நினைத்து நீ! மீதி
உடுத்துதல் வேண்டும்!
நகைகளைப் பூட்டத்
தொடங்கு நீ முன்னே!
அவையோ உடனே
வந்தேகும் பாரேன்!
பூங்  :     தலையலங்காரம்
செய்தபின் அதனைக்
கலையாகச் செய்வேன்
செல்க! நீர்! உடனே
குறும்பத்தான் உனக்கு!
விரும்பும் இது பொழுதா?
பொறுமையே இல்லை!
விடுங்களேன்! என்னை!
(காட்சி முடிவு)
- பாடும்
aa.ve,mullainilavazhagan


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்