பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 11– ஆ.வெ.முல்லை நிலவழகன்
அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு
இடம் : மரக்கிளை
நிலைமை :
(நாடகம் பார்க்கும் ஆவலிலே
நவின்றிடும் பேடை எண்ணாது
கூடாக் கோபத்தை துணைக்கொண்டு
கொட்டுது சொற்களை ஆண்சிட்டு)
பெண் : அப்பப்பா! இவர்கள் என்னதான்
பேசுகிறார்களோ புரியவில்லை!
எப்பவும் இவர்கள் இப்படித்தான்
பேசிக் கொண்டிருப்பரோத் தெரியலையே!
ஆண் : அவர்கள் ஏதோ! பேசட்டுமே!
அதனால் நமக்கு வருவதென்ன?
செவனே என்று சில நாழி
பேசாதிருவேன் நீ கொஞ்சம்!
பெண் : விசிலும் ஊதித் திரை நீக்கி
நாடகம் கூடத் தொடங்குதுபார்!
அசைவே இன்றி நாடகத்தை
அமர்ந்தே மக்கள் பார்ப்பதைப்பார்!
(காட்சி முடிவு)
(பாடும்)
Comments
Post a Comment