உயிராய்த் தெரிவது என்றன் தமிழ்மொழி மட்டும்தான்
உயிராய்த் தெரிவது என்றன் தமிழ்மொழி மட்டும்தான் இலக்குவனார் திருவள்ளுவன் 01 March 2015 No Comment அழகாய் எனக்குத் தெரிவது உலகில் ஔவை மட்டும் தான் நிழலாய் எனக்குத் தெரிவது காதல் நினைவுகள் மட்டும்தான். புயலாய் எனக்குத் தெரிவது பாரதி பாடிய வரிகள்தான் உயர்வாய் எனக்குத் தெரிவது தாயின் அன்பு மட்டும்தான். கனவாய் எனக்குத் தெரிவது வான எல்லையைத் தொடுவதுதான் தினமும் உழைப்பது தெரிகிற வானை வசப்பட வைப்பதுதான். சிறப்பாய் எனக்குத் தெரிவது மண்ணில் மனிதனாய் வாழ்வதுதான் பிறப்பாய் எனக்குத் தெரிவது புகழைப் பெறுகிற நாளில்தான். உயிராய் எனக்குத் தெரிவது என்றன் தாய்மொழி மட்டும்தான் பயனாய் எனக்குத் தெரிவது வாழ்க்கை பயனுற வாழ்வதுதான். - ஏர்வாடி இராதா கிருட்டிணன் அகரமுதல 68 நாள்மாசி 17, 2046 / மார்ச்சு1, 2015