Posts

Showing posts from July, 2024

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 60 : மீனவன் வரலாறுணர்ந்த காதை

Image
      ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         01 August 2024         அ கரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 59 : இசைப்பணிக்கு எழுக எனல்-தொடர்ச்சி ) பூங்கொடி 13. மீனவன் வரலாறுணர்ந்த காதை அடிகளார் கூறத்தொடங்குதல்  இசையியல் இயம்பும் ஏட்டுச் சுவடி வசையிலா நினக்கு வழங்கிய மீனவன் தன்றிறம் கூறுவென் தயங்கிழை! கேளாய், நின்பெரும் பணிக்கும் நீள்பயன் விளைக்கும்;                    குறியிடத்திற் காதலர்           நெல்லூர் என்னும் நல்லூர் ஆங்கண்       5           கழனி வினைபுரி களமர் குடிதனில் எழில்நிறை செல்வி இடுபெயர்ப் பொன்னி நல்லவள் ஒருத்தி, கொல்லுலைத் தொழில்புரி வில்லவன் என்னும் விடலை தன்னொடு           அறியாக் காதல் வாழ்வின ளாகிக்  ...

அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 4. கண்டதும்கேட்டதும், 5. கொள்ளும் குத்துவெட்டும், 6. தூங்கு மூஞ்சிகள்

Image
ஃ ஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         30 July 2024         அ கரமுதல ( அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 3. கருமித்தனமும் சிக்கனமும்-தொடர்ச்சி ) அறிவுக் கதைகள் நூறு 4.  கண்டதும்   கேட்டதும் மேலை நாட்டிலே எழுத்தாளன் ஒருவன் – அவன் நூல்கள் மிக வேகமாகப் பரவின. எல்லாரும் படிக்க விரும்பினர். அவனுக்குப் புகழ் மேலும் மேலும் ஓங்கியது. இத்தனைக்கும் அவன் ஒரு படிப்பாளியும் அல்லன்: பட்டதாரியும் அல்லன்; எழுத்தாளனுமல்லன்; பேச்சாளலுமல்லன்; ஒரு குதிரை வண்டி ஒட்டுபவன். பத்திரிகை நிருபர்கள் அவனிடம் நெருங்கி – ‘ உனக்குத்தான் படிக்கத்தெரியாதே? நீ படித்ததில்லையே? எப்படி நூலாசிரியன் ஆனாய்?  இவ்வளவு பெருமை, புகழ்ச்சி எங்கும் பரவி வருகிறது. பெரிய பட்டதாரிகளும் எழுத்தாளர்களும் உன்னைக் காணப் பொறாமைப் படுகிறார்களே! நீ எழுதிய முதல் நூல் எது? – என்று கேட்டார்கள். அதற்கு அவன் – நான் எழுதிய முதல் நூலின் பெயர் – ‘கண்டதும் கேட்டதும்’ – என்று சொன்னான். பத்திரிகை நிருபர்கள் திரும்பிப் போய்விட்டார்கள். இதிலிருந்து தெரிவ...

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 14. மனமும் இனமும்

Image
      ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         26 July 2024         அ கரமுதல ( என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 13. இனத்து இயல்பாகும் அறிவு- தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம்    11. மனமும் இனமும் செயல், புறத்தே நிகழ்வது; உணர்வு அகத்தே எழுவது , செயல் புலப்படக்கூடியது :  உணர்வு புலப்பட மாட்டாதது . புறத்தே நிகழும் செயல் அகத்தே எழும் உணர்வை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். அதுவே இயற்கையுமாகும். உணர்வு ஊற்றெடுக்கும் அகமும், அவ்வுணர்வை வெளிப்படுத்தும் நாவும், அதன் வழிச் செயல்படும் மெய்யும் ஒன்றிற்கொன்று தொடர்புடையவாகும் இம்மூன்று நிலையாலும், மனிதர் தூய்மையுடையராதல் வேண்டும். இதை வலியுறுத்தவே,  உண்மை, வாய்மை, மெய்ம்மை என ஒரே பொருள் குறிக்க, மூன்று சொற்களைப் பெற்றுளது தமிழ் மொழி.   உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்வுத் தூய்மையை உணர்த்துவது உண்மை. வாயடியாக எழும் சொல்லின் தூய்மையை உணர்த்துவது வாய்மை. மெய் அடியாக எழும் செயல் தூய்மையை உணர்த்துவது மெய்ம்மை. சொல்லும் ...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 59 : இசைப்பணிக்கு எழுக எனல்

Image
      ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         25 July 2024         அ கரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன -தொடர்ச்சி) பூங்கொடி மலையுறையடிகள் வாழ்த்திய காதை இசைப்பணிக்கு எழுக எனல் இசைத்தமிழ் முழக்குக எங்கணும் பெரிதே! 120 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ கழியிருள் - மிகுந்த இருள், தேன்மொழி - பூங்கொடி. +++++++++++++++++++++++++++++++++++++++++++++ வசைத்தொழில் புரிவோர் வாய்தனை அடக்குக! இசைப்பணி புரிதல் இனிநமக் கேலாது வசைத்தொழில் ஈதென வாளா விருந்தனை! திசைத்திசைச் சென்று செந்தமிழ்ப் பாட்டின் இசைத்திறன் காட்டுதி இனிநீ தாயே! 125 நின்னுயிர் பெரிதோ? தென்மொழி பெரிதோ? இன்னுயிர் ஈந்தும் இசைத்தமிழ் பேணித் தோமறு பணிசெயத் துணிந்தெழு நீ’என, அடிகளார் வாழ்த்து ஆம்என மொழிந்தனள் ஆய்தொடி அரிவை; `தாய்க்குலம் வாழ்க! தமிழினம் வாழ்க! 130 ஏய்க்கும் தொழில்போய் ஏர்த்தொழில் வாழ்க! வாழ்கநின் னுள்ளம்! வாழ்கநின் தொண்டு! வாழ்கபல் லாண்’டென வாழ்த்தினர் அவரே; அருண்மொழி அன்னையும்...

அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 3. கருமித்தனமும் சிக்கனமும்

Image
       ஃஃஃஃஃ  இலக்குவனார் திருவள்ளுவன்         23 July 2024         அ கரமுதல ( அறிவுக் கதைகள் 1. கல்வியும் கல்லாமையும் & 2. கருமியும் தருமியும் – கி.ஆ.பெ. – தொடர்ச்சி ) அறிவுக் கதைகள் நூறு 3. கருமித்தனமும் சிக்கனமும் பள்ளி வாசல் கட்டவேண்டுமென்று எண்ணிய மவுல்வி நபி நாயகமவர்களிடம் சென்று பொருள் வேண்டு மென்று கேட்டார். அவர் ஒரு செல்வனைக் குறிப்பிட்டு அவனிடம் கேட்டுப் பெறும்படி அனுப்பினார். அப்படியே மவுல்வியும் செல்வனைக் காணச் சென்ற போது, அங்கே – வேலைக்காரனைக் கையை மடக்கி மரத்தில் வைத்துக் கட்டி – குத்து 10 குத்திக் கொண்டிருந்தான் செல்வன். ‘ஏன் இப்படி’ – என்று அருகில் உள்ளவரைக் கேட்க, “வேலைக்காரன் கடையில் பருப்பு வாங்கி வரும் போது வழியில் 10 பருப்பு சிந்திவிட்டானாம், அதற்காக 10 குத்துகள் அவனைக் குத்திக் கொண்டிருக்கிறான் செல்வந்தன்” என்றான். – இது கேட்டதும், மவுல்வி பயந்து, பணம் கேட்காமலே திரும்பி வந்து விட்டார். பின், நபி பெருமானார் மவுல்லியை ‘செல்வன் எவ்வளவு கொடுத்தான்?’ என்று கேட்க, “அங்கே செல்வன், தன...

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 13. இனத்து இயல்பாகும் அறிவு

Image
         ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         19 July 2024         அ கரமுதல ( என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 12. அனைய கொல்! – தொடர்ச்சி ) என் தமிழ்ப்பணி அத்தியாயம்  10. இனத்து இயல்பாகும் அறிவு நிலம் பெயராப் பொருள்களாம் மரம், செடி, கொடிகளும் ,  நீர்வாழ்வனவும், பறப்பணவும், நிலத்தில் ஊர்வனவும் நடப்பனவும்  ஆகிய அனைத்தும், உயிர் உடைய பொருள்கள் என்ற ஒருமைப்பாட்டால் ஓர் இனம் எனக் கருதப்படினும், அவ்வுயிரினம் அனைத்திலும் மனித இனம் உயர்வுடையது எனக் கருதப்படுவதற்குக் காரணமாய் நிற்பது மனித இனம் பெற்றிருக்கும் பகுத்துணர் அறிவே ஆகும். தக்கனவும், தகாதனவும், ஏற்பனவும் மறுப்பனவும்  கலந்தே காட்சி அளிக்கும் உலகில், தக்கன இன்ன தகாதன . இன்ன, ஏற்பன இன்ன மறுப்பன இன்ன எனத் தெளிவாக உணர்ந்து தக்கனவும் ஏற்பனவும் கொண்டு, தகாதனவும் மறுப்பனவும் கைவிடத் துணைபுரியும் அறிவினைப் பெற்றிருப்பதினாலேயே,  மனித இனம் ஏனைய உயிரினத்தினும் சிறந்து விளங்குகிறது . ஆகவே, மனித இனத்திற்குச் சிறப்ப...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன

Image
  ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         18 July 2024         அ கரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்-தொடர்ச் சி) பூங்கொடி மலையுறையடிகள்   வாழ்த்திய   காதை தொண்டர்க்கு வேண்டுவன தொண்டுபூண் டார்க்குத் தூயநல் லுளனும், கண்டவர் பழிப்பாற் கலங்கா உரனும், துயரெது வரினும் துளங்கா நிலையும், அயரா உழைப்பும், ஆயும் அறிவும்,                    தந்நல மறுப்பும், தகவும் வேண்டும்         105           இந்நல மெல்லாம் ஏற்றொளிர் நீயே;       இருளும் தொண்டும்           விளக்கிடை நின்றான் வீங்கிருள் புகுவோன் துளக்கம் கொள்வான்; துணைவிழிப் புலனும் ஒளியிழந் தொருபொருள் உணரா திருக்கும்;           ...