புரட்சி விதைகளை விதைத்தாரே இலக்குவனார்
புரட்சி விதைகளை விதைத்தாரே!
தத்தனா தானனத் …… தனதான
தத்தனா தானனத் …… தனதான
……… பாடல் ………
வற்றிடா நீர்வளச் சிறப்போடு
உற்றசீர் வாய்மேடு–தலம்வாழ்ந்த
சிங்கார வேலர் இரத்தினத்தாச்சி
செய்தவப் பயனென உதித்தாரே
ஒப்பிலாப் போர்க்குண மறத்தோடு
முத்தமிழ் காத்திடப் பிறந்தாரே
வளைந்திடாத் துணிவுக்கு உருவாக
வையகம் போற்றிய இலக்குவரே!
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன …… தனதான
முற்றிய புலவரின் உற்றநல் துணையொடு
நற்றமி ழறிவினை –உளமாரப்
பெற்றபின் இளையவர் கற்றிடும் வகையினில்
வித்தக ரெனத்தமிழ்ப்–புலவோராய்
செந்தமி ழியலொடு சங்கநூற் புலமையும்
முந்துநூ லனைத்துமே—மகிழ்வோடு
கற்பவர னைவரும் பெற்றிடும் வழியினை
மெத்தவும் முனைப்பொடு அளித்தாரே
பள்ளியில் தொடங்கியே பற்பல நிறுவனம்
முற்றுமே பயனுற–உழைத்தாரே
சங்க நூல்மாண்பொடு வள்ளுவர் நெறியுமே
எங்குமே பரப்பிட–முனைந்தாரே
மெத்தவும் துணிவொடு பத்திரி கைப்பணி
மொழிநலன் சிறந்திட—இழப்போடு
சிக்கலை எதிர்கொண்டு புரட்சி விதைகளை
மக்களின் மனத்தினில்- விதைத்தாரே!
- பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்
Comments
Post a Comment