Skip to main content

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.11 -1.7.15.

 அகரமுதல





(இராவண காவியம்: 1.7.6 -1.7.10. தொடர்ச்சி)

இராவண காவியம்

  1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம்

        11.      கேட்டிடிற் காதுக் கின்பம் கிளந்திடின் நாவுக் கின்பம்

               ஊட்டிடி னுளத்துக் கின்பம் உணர்ந்திடி னுணர்வுக் கின்பம்

               பாட்டுரை நடையிற் செல்லும் பழந்தமிழ்ப் பாவாய் நீதான்

               வீட்டிலா வின்ப மானால் விரும்பிடார் யார்தான் சொல்லாய்.

        12.     அஎன வாயங் காக்கின் அன்னையுன் புலனா றைந்தும்

               முக்கனி தேன்பால் கண்டும் முகஞ்சுழித் தினைந்தே யொல்கப்

               புக்கெழீ யியல்பா யின்பம் புல்குசெந் தமிழ்நீ யானால்

               அக்கறை யொடுநின் நச்சார் யாரினி தறைவா யம்மா.

  

13.     மன்னரைப் பாடி முன்னர் வண்டமிழ்ப் புலவர் பின்னர்த்

               தன்னையா னாது பாடல் தகவில வினியம் மன்னர்

               இன்னுயி ரெனவே போற்று மிருந்தமிழ் நாடு கொண்டு

               மன்னனாய் வாழ வெண்ணி வளைகட லிருந்த தம்மா.

        14.     தனித்தனிப் பொருளிற் றோய்ந்து தமிழொடு முரணி யாங்கே

               இனித்திடு மினிமை யெல்லா மெதிர்த்துமு னிற்க வாற்றாப்

               பனித்தவை புகல டைந்து பணிந்ததா லினிமை காணாக்

               கனைக்கடல் தமிழை யுண்ணக் கருத்திடைக் கொண்ட தம்மா.

        15.     அரும்பொரு ளடைதற் காக வாங்குநின் றீங்குப் போந்து

               வரும்பொருட் காகத் தீர்ந்த வடவரை யெள்ளி நாட்டை

               ஒருங்குறு பொருளோ டாளு முரிமையுங் கொள்ள வெண்ணிக்

               கருங்கடல் வடவர் நாணக் காலம்பார்த் திருந்த தம்மா.

குறிப்பு :      11. வீட்டி லா – நீக்க முடியாத.

  1. ஆனாது – பொருந்தாது. 14. பனித்தல் – நடுங்குதல். கனைத்தல் –
    ஒலித்தல். 15. வரும்பொருள் – வளம், பெரும் பொருள். தீர்தல் – அன்பினீங்கல்

(தொடரும்)
இராவண காவியம் – புலவர் குழந்தை

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்