புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.46-50
(இராவண காவியம்: 1.2.41-45 தொடர்ச்சி)
இராவண காவியம்
1. தமிழகக் காண்டம்
2. தமிழகப் படலம்
முல்லை & பாலை
- கொன்றையம் புறவிடைக் கொடியின் மின் னரி வான்
குன் றுறை யிளையகார் குறுகி மாலையிற்
சென்றவர் வரவெதி நள்ளிச் செவ்வியர்
முன் றிலி லிறைகொள் முல்லை யோங்குமால்,
பாலை
- எல்லிய முது வெயி லெறிப்படி நல்வள
முல்லையுங் குறிஞ்சியும் முறைமை தப்பியே
நல்லியல் பிழந்தற நலிவு செய்திடும்
பல்லவங் கருகுவெம் பாலை காணுவாம்.
- வற்றிய விருப்பையும் வதங்கு மோமையும்
துற்றிய யானை தன் றுளைக்கை யைப்பிடி
பற்றியே யுரலடி பதைப்பு வெங்கனல்
சுற்றிட வுடல்துடி துடித்துச் செல்லுமே.
49.மன்னிய முது வெயில் வளைப்ப வாய்வெரீஇ
இன் னிளங் குருளை மிக் கினைந்து வெம்பிடத்
தன் னிழல் தங்கவே தாய்மை மீதுற
நன் னரில் வலியசெந் நாயு யங்குமே.
50.போதர வேவிடாய் புலம்பிப் பொள்ளென
மாதறு நீர்ச்சுனை மருவி நீர்பெறாப்
பாதிரி யலர்பறந் தலையின் பாலித்
தூதுணம் புறவினந் துயருற் றேங்குமே.
குறிப்புகள்
- மறி – ஆடு; பிணை-பெண்மான்; கலை-ஆண்மான்,
- இறைகொள் – இருத்தல்.
- எல்லி – ஞாயிறு; பல்லவம் – தளிர்;
49, வெரீஇ – வெருவி;
வாய்வெருவுதல் – சோர்வால் வாய் குழறுதல்;
குருளை – குட்டி; தாய்மை – அன்பு;. நன்னர்இல் – நலமில்லாத. உயங்குதல்-வருந்துதல்.
- மாது-அசை; பறந்தலை-பாலை நிலத்தூர்; தூது உண் அம் புறவு> தூது-பருக்கைக்கல்.
Comments
Post a Comment