மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 36
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 01 April 2022 No Comment (மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 35 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் இயல் 13 தொடர்ச்சி “விட்டுத் தள்ளுங்கள். கழிசடையாகத் தலையெடுத்திருக்கிறது. எனக்கு இனிமேல் இது புதுக்கவலை” என்று ஏக்கத்தோடு சொன்னாள் அவள். அப்போது முருகானந்தம் மட்டும் தனியாகத் திரும்பி வந்தான். “காசு வைத்துச் சீட்டு ஆடியதற்காகப் பையன்களைப் போலீசு இலாரியில் ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள். நான் போவதற்குள் பையன் கும்பலோடு இலாரி யில் ஏறிவிட்டான்” என்று முருகானந்தம் கூறியதும் “அது இருக்கட்டும். காலையில் பையனைக் கவனிக்கலாம். இப்போது வேறு ஒரு காரியத்துக்கு உன் யோசனை தேவை. இந்த அம்மாள் வந்திருக்கிறார்கள் பார்?” என்று முருகானந்தத்தை உட்கார்த்தி வைத்து விவரத்தைக் கூறினான் அரவிந்தன். குறிஞ்சி மலர் இயல் 14 “கற்பூரப் பாத்தி கட்டிக் கத்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சி பொற்பூர உள்ளிதனை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருந்தக்காட்டும் சொற்பேதையருக்(கு) ...