போர்கள் 2. – சி.இலக்குவனார்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 01 October 2021 No Comment ( இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 28 – தொடர்ச்சி ) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் ( சங்கக் காலம் ) 29 15. போர்கள் (தொடர்ச்சி) சங்கக்காலத் தமிழரசர்கள் அமைதி நோக்கோடு அருள் நோக்கமும் உடையவராவர். இக்காலத்தில் இரு பகைநாடுகள் போரிலீடுபட்டிருக்கும்போது அவ்விரு நாடுகளையும் சாராது, இரு நாட்டுப் படைகளிலும் துன்புறுவோர்க்குச் ‘ செஞ்சிலுவைச் சங்கம் ’ எனும் அருள்நெறி அமைப்பு அன்போடு சென்று ஆம் உதவிகளைச் செய்கின்றது. இது போன்றே அக்காலத்தில் உதியன் சேரலாதன் எனும் சேரநாட்டுப் பெருமன்னன், பாரதப் போர் நிகழ்ந்த காலத்து, பாண்டவர் கௌரவர் எனும் இருசார் மன்னரின் படைகளுக்கும் பெருஞ்சோறு அளித்து அறச்செயல் ஆற்றியுள்ளான். இச் செயலை முரஞ்சியூர் முடிநாகர் ஆயர் எனும் பெரும் புலவர், “ அலங்குஉளைப் புரவி ...