முத்தமிழ் ஒன்றே மூவுலகின் எல்லை – ஆற்காடு க குமரன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 27 October 2020 No Comment View Post முத்தமிழ் ஒன்றே மூவுலகின் எல்லை! என் அன்னையே எந்தன் முதல் அறிமுகம் என் அன்னைக்கு நான் புதுமுகம் எனக்கான ஒரே முகம் என் அன்னையின் திருமுகம் தொப்புள் கொடி உறவு துண்டிக்க தொடங்கியது எந்தன் வரவு என் அன்னையே என் முதல் ஆசான் கருவறையே நான் கற்கத் தொடங்கிய முதல் பள்ளி வாய் வழியவள் வாசித்த மொழி வசப்பட்டது எனக்குள்ளே வளரவளர வார்த்தைகள் புலப்பட்டன அம்மா என்று நான் அழைத்த முதல் வார்த்தை கூட அகத்தில் அன்னை கற்றுத்தந்தது கற்றுத்தந்த அவளுக்கான முதல் காணிக்கை அது அப்பா என்று நான் அழைக்கவில்லை அந்த மாமனிதரை பார்த்ததால் விளைந்த பிரமிப்பு உலகம் புரியும் முன்னே உறவுகள் புரிந்தது உலகம் புரிந்த பின்னே கலகம் விளைந்தது…… கலகம் விளைந்தாலும் கலங்காமல் என் தாய் தமிழ் மொழி உள்ளுக்குள் உயிர்த் துளியாய் இருந்தபோதே உறைந்ததல்லவா எனக்குள்ளே என் மொழி அரிதாரம் பூசப்பட்ட ...