சுந்தரச் சிலேடைகள் 17 : பெண்மகளும் பெட்டகமும் – ஒ .சுந்தரமூர்த்தி
சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை அணி 17
பெண்மகளும் பெட்டகமும்
வாய்மூடிக் கொள்ளுமே, வாய்திறக்க முத்துதிர்க்கும்
தூய்மை தனைநாடும், நல்சுமக்கும் – ஏற்புறப்
பல்நிலை தானிருக்கும் பாதரு காரிகையே !
வெல்மகளும் பெட்டகமாய் வீடு.
பொருள்: பெண் மகள்: | ) தேவைப்படும் நேரத்தில் அளவாகப் பேசிவிட்டு வாயை மூடிக் கொள்வர்.
2) வாய் திறந்தால் வெண்முத்துகளாய்ப் பற்கள் ஒளிரும் .
3) தூய்மையாக இருப்பார்கள்.
4) குடும்பப் பொறுப்பை உணர்ந்து குடும்பத்தைத் தாங்கும் தூணாக இருப்பர்.
5) பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம் பெண் என்று பல நிலைகள் கொண்டிருப்பர்.
பெட்டகம்:
1 எந்நேரமும் மூடியே இருக்கும்.
2 வாய்(கதவைத் ) திறந்தால் உள்ளிருக்கும் அரும்பொருள் காட்டும்
3 . தூய்மையான ஆடைகளை உள்ளே வைத்திருக்கும்.
4) உள்ளிருக்கும் பொருட்களைத் தாங்கும் .
5) பல அடுக்குகளைப் பெற்றிருக்கும்.
எனவே பெண் மகளும் பெட்டகமும் ஒன்றாகும்.
Comments
Post a Comment