Skip to main content

சுந்தரச் சிலேடைகள் 16: மங்கையும் கங்கையும் – ஒ.சுந்தரமூர்த்தி




 

சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை  அணி 16

மங்கையும் கங்கையும்

சடைமே லிருக்கும், சனிநீரு முண்டாம்
மடைமையுந் தண்ணளியாய் மண்டும் .- நடையழகாம்
நானிலத்தில் நற்றமிழ்வாழ் நற்கங்கை
வானிலவாள் மங்கைக்கே ஒப்பு .
பொருள்
1) சிவன் சடைமேலிருந்து கங்கை வருகிறது
பெண்களுக்கு கூந்தலில் போடப்பட்ட சடை தலைமேல் இருக்கிறது .
2) சனி நீர்  – ஊற்று நீர்
கங்கையிலும் நீர் ஊற்று இருக்கிறது
பெண்களின் கண்களிலும் நீர் ஊற்று இருக்கிறது .
3) கங்கை நீர் வெளிச்செல்ல மடைகள் உண்டு .
பெண்களிடம் மடைமை என்ற தன்மை உண்டு .
4) கங்கை பாய்ந்தோடும் அழகும்
பெண் நடையழகும் சிறப்பானதாகும் .
5) கங்கையும், மங்கையும் நற்றமிழில் போற்றப்பட்டு நிறைய பாடல்கள் உள்ளன .
இவ்வாறான சிறப்புகள் ஒத்துப் போவதால் கங்கையும் , மங்கையும் ஒன்று .
கட்டிக்குளம்
ஒ .சுந்தரமூர்த்தி

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்