திருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி : வெ. அரங்கராசன்
திருக்குறள் அறுசொல் உரை
3. காமத்துப் பால்
15. கற்பு இயல்
131. புலவி
தலைமக்கள் ஒருவர்மீது ஒருவர்,
கொள்ளும் பொய்ச்சினமும், பிணக்கும்
(01-05 தலைவி சொல்லியவை)
- புல்லா(து) இராஅப் புலத்தை, அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
அவர்படும் துயரைக் காண்போம்
சிறிது; மனமே! நீ வேறுபடு.
1302. உப்(பு)அமைந்(து) அற்(று)ஆல் புலவி, அதுசிறிது
மிக்(கு)அற்(று)ஆல் நீள விடல்.
உணவில் உப்பின் அளவுபோல்
இருந்தால்தான், பிணக்கும் சுவைக்கும்.
- அலந்தாரை அல்லல்நோய் செய்(து)அற்(று)ஆல், தம்மைப்
புலந்தாரைப், புல்லா விடல்.
ஊடியாரைத் தழுவாமை, வருந்துவாரை
மேலும் வருத்துதல் போல்ஆம்.
- ஊடி யவரை உணராமை, வாடிய
வள்ளி முதல்அரிந்(து) அற்று.
ஊடியாரை உணராமை, வாடுகொடியை
வேரோடு அறுத்தல் போல்ஆம்.
- நலத்தகை நல்லவர்க்(கு) ஏஎர், புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.
மகளிர் புலவியும், நலம்சார்
ஆடவரை மகிழ்விக்கும் அழகே.
(06-07 தலைவன் சொல்லியவை)
- துனியும், புலவியும் இல்ஆயின், காமம்,
கனியும், கருக்காயும் அற்று.
பெரும்ஊடல், சிறுஊடல் இல்லாக்
காதல், கனி,காய் போன்றது.
- ஊடலின் உண்(டு)ஆங்(கு)ஓர் துன்பம், புணர்வது,
நீடுவ(து) அன்றுகொல், என்று.
“கூடல் நீளுமோ? நீளாதோ?”என,
ஊடலிலும் ஓர்துன்பம் உண்டு.
(08-10 தலைவி சொல்லியவை)
- நோதல் எவன்மற்று? நொந்தார்என்(று), அஃ(து)அறியும்,
காதலர் இல்லா வழி.
“என்னால் நொந்துள்ளாள்”என அறியாக்
காதலரை நொந்துதான் பயன்என்?
- நீரும், நிழலது இனிதே; புலவியும்,
வீழுநர் கண்ணே இனிது.
நிழலில் நீரும் இனிது;
விரும்புவாரிடம், பிணக்கும் இனிது.
- ஊடல் உணங்க விடுவாரோ(டு), என்நெஞ்சம்,
“கூடுவேம்”, என்ப(து) அவா.
ஊடலை நீக்காரோடு, ”கூடுவோம்”
என்று நினைத்தல் பேராசைதான்.
பேரா.வெ.அரங்கராசன்
Comments
Post a Comment