தமிழே வாழ்க! – ஆ. வெ. முல்லை நிலவழகன்
ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!
என்றே முழங்கிய தமிழே வாழ்க!
நாடும் மொழியும் தாயயன எம்மை!என்றே முழங்கிய தமிழே வாழ்க!
வணங்கிடச் சொன்ன தமிழே வாழ்க!
அன்பே தெய்வம்! அறமே கோவில்!
நன்றே சொல்லிய தமிழே வாழ்க!
வீரமும் அறமும் உயிரெனச் சொல்லி!
நெறிமுறை வகுத்த தமிழே வாழ்க!
வறுமையில் இருந்தும் விருந்திடச் சொன்ன!
பண்பிற் சிறந்த தமிழே வாழ்க!
தீமைகள் செய்தால் நன்மைகள் செய்தே!
திருத்திடச் சொன்ன தமிழே வாழ்க!
அரசுக் கட்டிலில் புலவன் துயின்றும்!
மன்னவன் மகிழ்ந்த தமிழே வாழ்க!
ஓளவைக்கு நெல்லிக்கனியினைக் கொடுத்து!
மன்னவன் மகிழ்ந்த தமிழே வாழ்க!
- தமிழ்மாமணி ஆ. வெ. முல்லை நிலவழகன்
தலைவர், வானளாவிய தமிழ்பேரவை
6,வள்ளுவர் தெரு, தூவாக்குடி
திருச்சிராப்பள்ளி 620 015
பேசி 99429 20141
6,வள்ளுவர் தெரு, தூவாக்குடி
திருச்சிராப்பள்ளி 620 015
பேசி 99429 20141
மிகவும் அருமை
ReplyDeleteமிகவும் அருமை
ReplyDelete