காலத்தை வென்ற கொடி! – செந்தமிழினி பிரபாகரன்
காலத்தை வென்ற கொடி!
ஏறுது பார் கொடி ஏறுதுபார்
ஏறுது பார் கொடி ஏறுதுபார் – இங்கு
ஏறுது பார் கொடி ஏறுதுபார் – தமிழ்
ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி – எட்டு
திக்கிலும் மானத்தைச் சேர்த்த கொடி
காலத்தை வென்றுமே நின்ற கொடி
புலி காட்டிய பாதையில் சென்ற கொடி
ஏறுது பார் கொடி ஏறுதுபார்
செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே
வீறிடும் கொடியிது – தமிழ்
மக்களைக் காத்த நம்மான மாவீரரை
வாழ்த்திடும் கொடியிது
புலி வீரத்தின் கொடியிது
மாவீரரின் கொடியிது
எத்தனை எத்தனை வேங்கைகள் இரத்தத்தில்
ஏறிய கொடியிது – பெரும்
சத்திய வேள்வியில் செத்தவர் மீதினில்
சாத்திய கொடியிது
தமிழ் ஈழத்தின் கொடியிது
புலி ஏந்திய கொடியிது
சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய
சாதனைக் கொடியிது – சங்கு
ஊதி முழங்கிட ஊர்மனையாவிலும்
உலவிய கொடியிது
சமதருமத்தின் கொடியிது
எங்கள் தாயவள் கொடியிது
ஆயிரம் ஆயிரம் வீறென வேங்கைகள்
ஆக்கிய கொடியிது – பிரபாகரன்
என்றிடும் காவிய நாயகன்
போற்றிடும் கொடியிது
தமிழ்த் தேசத்தின் கொடியிது
எங்கள் தேசியக் கொடியிது
எங்கள் தேசியக் கொடியிது
ஏறுது பார் கொடி ஏறுதுபார் – இங்கு
ஏறுது பார் கொடி ஏறுதுபார் – தமிழ்
ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி – எட்டு
திக்கிலும் மானத்தைச் சேர்த்த கொடி
காலத்தை வென்றுமே நின்ற கொடி
புலி காட்டிய பாதையில் சென்ற கொடி
ஏறுது பார் கொடி ஏறுதுபார்
செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே
வீறிடும் கொடியிது – தமிழ்
மக்களைக் காத்த நம்மான மாவீரரை
வாழ்த்திடும் கொடியிது
புலி வீரத்தின் கொடியிது
மாவீரரின் கொடியிது
எத்தனை எத்தனை வேங்கைகள் இரத்தத்தில்
ஏறிய கொடியிது – பெரும்
சத்திய வேள்வியில் செத்தவர் மீதினில்
சாத்திய கொடியிது
தமிழ் ஈழத்தின் கொடியிது
புலி ஏந்திய கொடியிது
சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய
சாதனைக் கொடியிது – சங்கு
ஊதி முழங்கிட ஊர்மனையாவிலும்
உலவிய கொடியிது
சமதருமத்தின் கொடியிது
எங்கள் தாயவள் கொடியிது
ஆயிரம் ஆயிரம் வீறென வேங்கைகள்
ஆக்கிய கொடியிது – பிரபாகரன்
என்றிடும் காவிய நாயகன்
போற்றிடும் கொடியிது
தமிழ்த் தேசத்தின் கொடியிது
எங்கள் தேசியக் கொடியிது
எங்கள் தேசியக் கொடியிது
எங்கள் தேசியக் கொடியிது
Comments
Post a Comment