ஏ…இறையே - துரை. ந. உ


ஏ…இறையே - துரை. ந. உ


 51_questionmark_vinaakkuri

ஏ….இறையே…! – இருவரியில் சொல்வேன்

நல்லவற்றைக் கிள்ளித் தருகிறாய்!;
அல்லவற்றைஅள்ளித் தருகிறாய்! ஏன்?
​வாழும் வழிகேட்டு நிற்பவரை வீழ்த்தி
வலிகூட்டிச் செல்கிறாய் ஏன்​ ?
துதித்தவரைத் துன்பத்துள் தள்ளும் தவறு;
மதிதெளிந்த செய்கையா கூறு
சோதனைமேல் சோதனைதந்து உம்குடியை
வேதனைக்குள்தள்ளுவதா சாதனை?​
சொல்மெய்தானோ!
இல்லையென்று சொல்லவில்லை; நல்லது
தான்இருந்தால்என்போரின் கூற்று
ஏன் இப்படி ? ​
பிடியும்…என் சாபம் படியும் :

51_iraiye_kelvi
துதிப்பவரை எற்றி மிதிப்பவரை, போற்றிஇறை
என்பவரைத் தூற்றும் உலகு
இரைஞ்சும் அடியவரைக் கைவிடு வோரை
இறையல்ல என்று விடு
இரைகேட்கும் குஞ்சைஇரை ஆக்காது அதன்தாய்;
மறைஇதைச் சொல்வீர் இறைக்கு
துதிப்போரைச் சாய்க்கசதி செய்யும் இறையை
மதிப்போரும் மாய்வார் விரைந்து
​நிழல்வேண்டி நிற்பவரைத் தள்ளிவிடு  வோர்க்கு
புழல்வெளியில் உண்டாம் இடம். ​​




Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue