எங்குமெழுகவே! – தமிழ்மகிழ்நன்
எங்குமெழுகவே!
அகர முதலுடை அன்னைத் தமிழை
இகழும் வடவரின் இந்தியை வீழ்த்த
இகலெதிர் கண்ட இலக்குவர் ஈன்ற
புகழ்மிகு வள்ளுவ! பூட்கை வினைஞ!
தகவுடைச் செந்தமிழ்த் தாயினங் காக்க
முகிழ்த்த முரசே! மொழிப்போர்க் களிறே!
முகிலைக் கிழித்தொளி வீசும் நிலவாய்
அகர முதல யிதழெங்கு மெழுகவே!
Comments
Post a Comment